Sunday, November 05, 2006

சதாம் உசேன்

பாக்தாத், நவ. 5-

பேரழிவு ஆயுதங்களை தயாரித்ததாக கூறி ஈராக் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போர் தொடுத்தது. கடும் தாக்குதலுக்குப் பிறகு சதாம் உசேன் ஆட்சியை அமெரிக்க கூட்டணி படை அகற்றியது. ஆனால் சதாம் உசேன் அமெரிக்க படையிடம் சிக்காமல் பதுங்கி இருந்தார்.

பல மாதங்களாக நடந்த தேடுதல் வேட்டைக்கு பிறகு பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேனை அமெரிக்க படை 3 ஆண்டுகளுக்கு முன் கைது செய்தது.சதாம் ஆட்சி அகற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு அமீது கர்சாய் தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட சதாம் உசேன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தனது ஆட்சி காலத்தில் சதாம் உசேன் தனது அரசியல் எதிரிகளை கொன்றதாகவும், 1980-ம் ஆண்டு துஜைல் நகரில் 148 ஷியா முஸ்லிம் மக்களை கொன்று குவித்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாக்தாத்தில் இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ரவூப் அப்துல் ரகுமான் தலைமையில் 5 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது சதாம் உசேனின் வக்கீல்கள் பலர் கடத்தப்பட்டனர். விசாரணை கூண்டில் உட்கார்ந்தபடியே சதாம் உசேன் நீதிபதியுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். பல தடவை விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வெளிநடப்பு செய்தார். வழக்கு விசாரணையில் அமெரிக்கா தலையீடு இருப்பதாகவும், நீதிபதி அமெரிக்காவின் கைப்பாவை என்றும் சதாம் உசேன் ஆவேசமாக குற்றம் சாட்டினார்.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பு 2 வாரத்துக்கு மேல் தாமதம் ஆனது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சதாம் உசேனுடன் அவரது சகோதரர், உதவியாளர் உள்பட மேலும் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சதாம் உசேனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு அந்த நாட்டு சட்டப்படி தூக்கு தண்டனை வழங்கப்படுவது உறுதி என்றே அனைத்து வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. ஒருவேளை அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதை யொட்டி ஈராக் முழுவதும் பதட்டம் உருவாகி உள்ளது. ஏற்கனவே சதாம் உசேன் ஆதரவு தீவிரவாதிகள், சன்னி பிரிவினர் ஈராக் அரசுக்கு எதிராகவும், அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

சதாம் உசேன் வழக்கில் தீர்ப்பு வருவதால் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் நாடு முழுவதும் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

ராணுவத்தினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு உடனடியாக வேலையில் சேர உத்தரவிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவை துணிச்சலுடன் எதிர்த்த சதாம் உசேனை சில அரபு நாடுகளும், இதர முஸ்லிம் நாடுகளும் ஆதரிக்கின்றன. அந்த நாடுகளிலும் பதட்டம் நிலவுகிறது. சதாம் உசேனுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவை கண்டித்தும் ஜோர்டான் உள்பட பல நாடுகளில் ஆர்ப்பாட்டம், பேரணி நடந்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் அதை ஒட்டிய 2 முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரம் அமைந்துள்ள சலாகுதீன் மாகாணத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஈராக்கில் ரத்த ஆறு ஓடும் அபாயம் அதிகரித்துள்ளது.

வாகன போக்குவரத்தும் சில நகரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பாக்தாத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஷியா மற்றும் குர்து இன மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சதாம் உசேன் ஆட்சியில் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் இன்று தீர்ப்பு வருவதால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள்.

சதாம் வழக்கில் தீர்ப்பு கூறும் நீதிபதி அப்துல் ரகுமான் குர்து இனத்தை சேர்ந்தவர். சதாம் உசேனால் இவரது இனத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இன்று அந்த நீதிபதி வாசிக்கும் தீர்ப்பு 100-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டது. அதை முழுமையாக படித்து முடிக்க பல மணி நேரம் ஆகும். தீர்ப்பு மற்றும் தண்டனையை முழுமையாக ஒரே நாளில் அறிவிக்க முடியாததால் கட்டம் கட்டமாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தூக்குத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் அதை எதிர்த்து சதாம் உசேன் அப்பீல் செய்ய முடியும். எனவே தண்டனை நிறைவேற்றப்படுவதிலும் தாமதம் ஆகும்.

சதாம் உசேன் வாழ்க்கை குறிப்பு

1937 ஏப்ரல் 28-பாக்தாத் அருகே திக்ரிக் பகுதியில் உள்ள அவுஜா கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாக பிறந்தார்.

1956 ஈராக்கின் பாத் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினராக சேர்ந்தார்.

1958-அப்போதைய ஈராக் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1959- பிரதமர் அப்துல் கரீமுக்கு எதிராக நடந்த புரட்சியில் ஈடுபட்டார். அப்போது மந்திரியின் காவலாளி சுட்டதில் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதே ஆண்டில் சிரியா மற்றும் எகிப்துக்கு தப்பி ஓடினார்.

1960 பிப்ரவரி 25-புரட்சி நடத்தியதாக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1962- எகிப்தில் மேல்நிலை பள்ளி படிப்பை முடித்தார்.

1963 பிப்.8- ரமகான் புரட்சியை தொடர்ந்து ஈராக் திரும்பினார்.

1966- பாத் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆனார்.

1967- ஜெயிலில் இருந்து தப்பி ஓட்டம்.

1968- உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைமை பொறுப்பு ஏற்றார். சட்டத்துறை பட்டம் கிடைத்தது.

1979 ஜுன்- ஈராக் அதிபர் பொறுப்பை ஏற்றார்.

1980 செப்டம்பர் 22- ஈரானுடன் போர் தொடங்கியது.

1988- அமெரிக்க கடற்படையின் உதவியுடன் ஈரான் பிடித்த பகுதிகளை மீட்டார்.

1990 ஆகஸ்டு 2- குவைத்துக்கு எதிராக போர் தொடுத்து குவைத்தை கைப்பற்றினார்.

2003 ஏப்ரல்- அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் சதாம் ஆட்சி அகற்றப்பட்டது.

ஜுன் 22- சதாமின் 2 மகன்களும் (உதய்-குவாசாய்) குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

டிசம்பர்-11 பாதாள சுரங்கத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டார்.

2004 ஜுலை 1- அவர் மீதான வழக்கில் முதல் தடவையாக பாக்தாத் கோர்ட்டில் ஆஜரானார்.

மாலை மலர்

Sunday, September 03, 2006

ஜீவஜோதி திருமணம்



பல்லாண்டு வாழ வாழ்த்துவோம்

Wednesday, August 30, 2006

சிந்தனைக்கு

வில்லது வளைந்த தென்றும் வேழம துறங்கிற் றென்றும்
வல்லியம் பதுங்கிற் றென்றும் வளர்கடா பிந்திற் றென்றும்
புல்லர்தம் சொல்லுக் கஞ்சி பொறுத்தனர் பெரியோ ரென்றும்
நல்லதென் றிருக்க வேண்டாம் நஞ்செனக் கருத லாமே.

வில் வளைந்து கொடுத்தல், யானை நித்திரை செய்தல், புலி பதுங்குதல் கிடாய் பின்வாங்குதல், கீழ்மக்கள் சொல்லுக்குப் பயந்து பெரியோர் பொறுமை யோடிருத்தல் இவைகள் யாவும் நன்மை யென்று நினைக்கக்கூடாது, விஷமென்றே சிந்திக்க வேண்டும்.

Monday, August 14, 2006

வழக்கு மன்றத்தில் தேவர்

சென்னை ஐகோர்ட் நீதிபதியாக 1965-75 ஆம் ஆண்டுகளில் பணியாற்றியவர் கிருஷ்ணசாமி ரெட்டியார்,'கம்பீரமான நீதிபதி' என்று பெயரெடுத்தவர்.

தமிழக அரசியலில் அப்போது மட்டுமல்ல; இப்போதும் பரபரப்பாக பேசப்படுவது. முதுகுளத்தூர் கொலை வழக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் உட்பட 13 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தேவருக்கு எதிராக ஆஜராக வக்கீல்கள் பயந்தனர்.

.ஜி. பாலகிருஷ்ணன் வீடு தேடி வந்தார். "அவசர விஷயம். முதல்வர் பக்தவச்சலம் உங்களை கூப்பிட்டு வரச்சொன்னார்" என்றார். போனேன்,"முதுகுளத்தூர் வழக்குக்கு அரசு வக்கீலாக போக எல்லாரும் பயப்படறாங்க நீங்தான் ஆஜராகணும்னு காமராஜர் விரும்பறார்" என்றார்.


சரின்னு சொல்லி வந்துட்டேன். 'என்னிக்கோ போகப்போற உயிர் தானே'னு நெனச்சிட்டே, வழக்கு நடக்கும் புதுக்கோட்டைக்கு போய் இறங்கினேன். சாயந்திர நேரம் போலீஸ் பாதுகாப்போடு வாக்கிங் போனேன். எதிரே இருநூறு, முன்னூறு பேரு கூட்டமா வந்தாங்க நடக்கிறது நடக்கட்டும்'னு நெனச்சு. நடந்தேன்.


அப்போது, சுமார் எழுபது வழக்குகள்ல கைதாகி ஆயிரத்து 200 பேர். சிறையில் இருந்தாங்க. அவங்கலோட உறவினர்கள்தான் என் எதிரே வந்தவங்க அருகே வந்ததும் தலைக்கு மேல கைய தூக்கி கும்பிட்டாங்க.


"அரசு வக்கீலா நீங்க வந்திருக்கிறதா சொன்னாங்க, கைதானவங்கள்ல தப்பு செய்தவங்களும் இருக்காங்க, தப்பு செய்யாதவங்களும் இருக்காங்க நீதி தர்மத்துப்படி செய்யுங்கய்யா..." என்று கதறினார்கள், வெட்டிடுவாங்க. .குத்திடுவாங்கன்னு, யாரைச் சொன்னாங்களோ, அவங்கதான் என்னை வீடு வரை கொண்டுவந்து விட்டுட்டுப்போனாங்க.


மறுநாள் விசாரணை குற்றவாளிகளோடு சேர்த்து தேவரையும் நிற்க வைத்திருந்தார்கள். பதறிவிட்டேன். அவருக்கு நாற்காலி கொடுக்கச் சொன்னேன். 'நாற்காலி இல்லை' என்றார்கள். என் நாற்காலியை தருவதாக சொன்னேன். கோர்ட் ஆடிப்போய்விட்டது.


நடப்பதை சலனமும் இல்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார் தேவர் பேச்சால் போர் முழக்கம் செய்யக்கூடிய அவர் கோர்ட்டுக்கு கொடுத்த மரியதை இருக்கிறதே.... எந்த சத்தமும் ரியாக்ஷனும் இல்லாமல் யோகம் பண்றது மாதிரி உட்கார்ந்திருப்பார். காலையில் வந்தவர், மாலையில் கோர்ட முடியும்போதுதான் எழுவார் மதியம் சாப்பிடக்கூட போகமாட்டார். இது இன்றைய அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டிய பாடம்.

கடைசியில் தீர்ப்பில் அவர் விடுதலையாகிட்டார். தீர்ப்பு வந்த அன்றும் கூட அவர் சந்தோஷமடையவில்லை, கொண்டாடவில்லை. இந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது."

என தனது பேட்டியில் கூறியுள்ளார்.


Saturday, August 12, 2006

திண்ணையில் வரலாற்றுத் திரிபுகள்

http://www.thinnai.com/?module=displaystory&story_
id=20608117&format=html
வேளாளரின் வரலாற்றுத் திரிபுகள்

என்ற தலைப்பில் ப்ரவாஹன் எழுதிய அல்லது பதில் கொடுத்ததற்கு என்னால்
முடிந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளேன்
. தெளிவாக கொடுக்க வில்லை
என்றாலும் குறிப்பகளால் கொடுத்துள்ளேன் சந்தேகம் வந்தால் எனது
மின்னஞ்சலில் கேட்கலாம்

மூவேந்தர்களும் முக்குலத்தோரே சோழன் கள்ளர், பாண்டியன் மறவர்,
சேரன் அகப்படியர்

இங்கே சோழன் கள்ளர் என்பதற்கான ஆதாரங்களை கொடுத்துள்ளேன்

1.விசயாலய சோழன் (850 – 880 , 836 – 870 )

இவனது தந்தை யார்என்று தெரியவில்லை முத்தரையரை வென்று தஞ்சையில் சோழர் ஆட்சியை அமைத்தவன் இவனே


2.ஆதித்த சோழன்/பெ. விசயாலய சோழன் 871-907

3.1ம் பராந்தக சோழன்/பெ. ஆதித்த சோழன்907-955

மதுரையும், ஈளமும் கொண்ட கோப்பரகேசரி என்ற பட்டம் பெற்றவன் சோழ பேரரசக்கு அஸ்திவாரம் அமைத்தவன் . தில்லைச் சிற்றம்பலத்துக்கு பொன் கூறை வேய்ந்தவன், சோழ சிகாமணி, சூரசிகாமணி , வீர நாராயணன் என்னும் சிறப்புப் பெயரைம் பெற்றவன். இவன் பெயரில் தான் வீராணம் ஏறியுள்ளது. இவனுக்கு 11 மனைவியர் 5 மகன்கள் 1. இராஜாதித்தன், 2. கண்டராதித்தன்,3.அரிகுலகேசரி, 4. உத்தமசீலி,5. அரிந்திகை () அரிஞ்சயன்.


    4.கண்டராதித்த சோழன்/பெ. 1ம் பராந்தக சோழன் இரண்டாவது மகன் 950-957

    மழவரையர் குலப்புதல்வி செம்பியன் மாதேவி சிவஞா செல்வரான கண்டராதித்தரின் மனைவி இவள் மகன் தான் மதுராந்தக தேவன் ( சிறிய பளுவேட்டரையரின் மருகன்)

    5.அரிஞ்சயன்/பெ. 1ம் பராந்தகனின் 3வத மகன் 956-957

    இவர் மனைவி வைதும்பராயர் குலப் புதல்வி ராணி கல்யாணி சுந்தரச் சோழரின் தாய் இன்னொரு மனைவி சேரமான் மகள் பராந்தகன் தேவி

6.2ம் பராந்தகன் (சுந்தரச் சோழன்)/பெ. அரிஞ்சயன் 957-970

பத்தாண்டுகள் அரசாண்ட அவனுக்கு பாரிச நோய் தாக்கியது மூத்தமகன் ஆதித்த கரிகாலன் வடக்கே காஞ்சியில் அரச பிரதிநிதியாக மாதண்ட நாயகன்(பிரதம சேனாதிபதி) கடைசிபுதல்வன் அருள்மொழிவர்மன் (பிற்காலத்தில் ராஜராஜன்) இலங்கைத்தீவில் போர்புரிந்து கொண்டிருந்தான் இருவருக்கும் நடுவில் குந்தவை தேவி பிறந்தவர்

7.உத்தமசோழன் (மதுராந்தகன்)/பெ. கண்டராதித்த சோழன் 973-985

கண்டராதித்த சோழனின் மனைவியும் உத்தமசோழனின் தாயும் ஆன செம்பியன் மாதேவி இவரிடம் தான் ராஜராஜன் வளர்ந்தார்

8.1ம் ராஜராஜன்/பெ. 2ம் பராந்தகன் 985-1014(தஞ்சைக் கோயிலை கட்டியவன்)

தமக்கை குந்தவை நாச்சி ராசராசனின் பட்டத்தரசி உலகமாதேவியும் இல்லத்தரசி வானதி தேவியும் . இளங்குழவிகளாகிய ராசேந்திரன், குந்தவை

9.1ம் ராஜேந்திரன்/பெ. 1ம் ராஜராஜ ன் 1012-1044

10.1ம் ராஜாதிராஜன் /பெ. 1ம் ராஜேந்திரன் மூத்தமகன் 1018-1054

11.ராஜேந்திர சோழதேவன்/பெ. 1ம் ராஜேந்திரனின் 2வது மகன் 1051-1063

12.வீரராஜேந்திர சோழன் (மேல்கொண்டான்) /பெ. ராஜேந்திர சோழதேவன் 1063-1070

13.ஆதிராஜேந்திர சோழன்/பெ. வீரராஜேந்திர சோழன் 1067-1070

14.1ம் குலோத்துங்க சோழன் Җ ராஜேந்திர சோழன் மகளின் மகன் 1070-1120 (மேல் கொண்டான்)

சந்திர குலத்துதித்த சாளுக்கிய அரசனாகிய இராசாராசனுக்கு மனைவியும் சூரிய குலத்து அரசனாகிய முதல் இராசேந்திர சோழன் என்னும் கங்கைகொண்ட சோழனுடைய மகளும் ஆன திருமகள் போன்ற அம்மங்கா தேவியின் மகனாவான் இவன் இவனை இவனது பாட்டி பார்த்தாள் அரசர்களுக்கு எல்லாம் அரசனாகு விளங்கும் தகுதியை அறிந்தாள் ;'என் மகள் பயிற்றுப் பிள்ளையாகிய இவன். எமக்குச் சுவீகார புத்திரனாகிச் சூரிய குலத்தை வளர்த்து விளக்க வல்லவன் ஆவான்' என்று கூறி அவனைச் சுவீகாரம் கொண்டாள்.

பன்னிரண்டாம் நூற்றாண்டில் செயங்கொண்டாரால் பாடப்பட்டது கலிங்கத்துப் பரணி. ,
கலிங்க நாட்டு அரசன் அனந்தவன்மனை வெற்றி கொண்ட போர்தான் கலிங்கப்போர். இன்றைய ஒரிஸ்ஸாவின் கீழ்ப்பகுதிதான் கலிங்க நாடாக விளங்கியது. பரணி என்றால் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வீரனைப் பாடும் பாடல் என்று பொருள்.
கருணாகர தொண்டைமான் என்ற தளபதியைக் கொண்டு முதல் குலோத்துங்க சோழன் அனந்தவன்மனை வென்ற கலிங்கப் போரைப் பற்றியதே கலிங்கத்துப் பரணி.

(இவனது காலத்தில் தான் துவாகுடி பெரியகுளத்தில் உள்ள நாட்டுக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது சிவன்கோவிலும் இவனது காலத்தில் தான் கட்டப்பட்டது இவன் மேல்கொண்டான் இவனது படைதளபதி கருணாகரத்தொண்டைமான்)


15.விக்ரமசோழன்/பெ. 1ம் குலோத்துங்க சோழன் 1118-1135

16.2ம் குலோத்துங்க சோழன்/பெ. விக்ரமசோழன்1133-1150



17.2ம் ராஜராஜ சோழன்/பெ. 2ம் குலோத்துங்க சோழன் 1146-1163

18.2ம் ராஜேந்திர சோழன் Җ 2ம் ராஜராஜனின் மைத்துனன் 1163-1178

19.3ம் குலோத்துங்கள்/பெ. 2ம் ராஜராஜ சோழன் 1178-1218 (மேல்கொண்டான்)

20.3ம் ராஜராஜசோழன்/பெ. 3ம் குலோத்துங்கள் 1216-1256

21.4ம் ராஜேந்திரசோழன்/பெ.3ம் ராஜராஜசோழன்  1246-1279 

மூன்று மன்னர்கள் கள்ளர்கள் அதுவும் மேல்கொண்டார் என கல்வெட்டுகளில்
கட்டப்பட்டது மற்றவர்கள் அவர்களது முன்னோர்கள்
,வாரிசுகள் இதில்
முதலாம் குலோத்துங்கள் மட்டும் ராஜேந்திரசோழனின் மகள் வயிற்றுப்
பிள்ளை
. அவனை அவனது பாட்டி தத்து எடுத்துக் கொண்டதால் அவனும்
மேல்கொண்டானாகிறான்
.
மழவரையர்
கள்ளர்களின் பட்டபெயர்களில் ஒன்று



இப்பொழுது பெரிய மனிதர்களாகவோ, பெரிய மனிதர்களின் வழியினராகவோ கள்ளர்கள் பெருந்தொகையினராய் இருந்து வரும் காவிரி நாடே சோழர்கள் வழி வழியிருந்து ஆட்சி புரிந்த நாடு என்பதை முதலில் நினைவிற் கொள்ளவேண்டும். சோழர்கள் சோணாடேயன்றி வேறு நாடுகளையும் ஓரொருகாலத்தில் வென்று ஆண்டிருக்கின்றனர். சோழரிற் சிலர்க்கு 'கோனேரிமேல் கொண்டான்' என்னும் பட்டம் வழங்கியிருக்கிறது, இப்பெயர் தரித்திருந்தோரும் , கொங்கு நாட்டையும் ஆட்சி புரிந்தோருமான மூன்றாம் குரோத்துங்க சோழனும், வீர சோழனும் முறையே வெங்கால நாட்டுக் கம்மாளர்க்கச் செய்திருக்கும் தீர்ப்பு ஒன்றும், கருவூர்க் கோயிற் பணியாளர்க்கு இறையிலி நிலம் விட்டிருப்பதைக் குறிப்பது ஒன்றுமாக இரண்டு கல்வெட்டுக்கள் கருவூர் பசுபதீச்சுரர் கோயிலில் வெட்டப்பட்டுள்ளன. அவை பின் வருவன:


"திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீகோனேரிமேல் கொண்டான் வெங்கால நாட்டுக் கண்மாளர்க்கு 15-வது ஆடி மாதம் முதல் தங்களுக்கு நன்மை தின்மைகளுக்கு இரட்டைச் சங்கும் ஊதி, பேரிகை உள்ளிட்டவும் கொட்டுவித்துக் கொள்ளவும், தாங்கள் புறப்படவேண்டும் இடங்களுக்குப் பாதரஷை சேர்த்துக் கொள்ளவும், தங்கள் வீடுகளுக்குச் சாந்து இட்டுக்கொள்ளவும் சொன்னோம். இப்படிக்கு இவிவோலை பிடிபாடாகக் கொண்டு சந்திராதித்தவரை செல்லத் தக்கதாகத் தங்களுக்கு வேண்டின இடங்களிலே கல்லிலும், செம்பிலும் வெட்டிக் கொள்க. இவை விழுப்பாதராயன் எழுத்து."

ஆனால் மறைமலையடிகளோ மூன்றாம் குலோத்துங்கனை வேளாளர் என்றே சொல்கிறார்

அது தவறு அவர் கள்ளரே

இந்த வேளாளர் எப்படி வந்தார்கள் :-

"பாண்டி நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடையிலுள்ள பகுதி பன்றி நாடு எனப்பட்டது. இந்நாட்டில் முதலில் இருந்தவர் வேடுவர். பின் குறும்பர் வந்தனர். அவர்க்குப்பின் வெள்ளாளர் வந்தனர். பன்றி நாட்டின் ஒரு பகுதி பாண்டியர் ஆட்சியின் கீழும், மற்றெரு பகுதி சோழர் ஆட்சியின் கீழும் இருந்தன. காராள வெள்ளாளர் கி.பி. முதல் நூற்றாண்டின் முன்பே சோழ தேயத்திற்கு குடியேறி விட்டனர். அவர்கள் தங்கள் உழவு தொழிலால் ஏற்பாரது வறுமையைப் போக்கி, அரசற்குப் பொருள் பெருக்கினார்கள். மூவேந்தருக்குட்பட்டுச் செல்வர்களாய் இருந்திருக்கின்றனர். சேர சோழ பாண்டியர்கள் வெள்ளாள குலத்தவரென்று கானகசபைப்பிள்ளை யவர்கள் கூறுவது தவறு. ஆதொண்டைச் சக்கரவர்த்தி காஞ்சியிலிருந்து வெள்ளாளர்களைச் சோணாட்டல் குடியேற்றினர் என்றும், பாண்டியன் உக்கிரப்பெருவழுதி கீழ்க் காஞ்சியிலிருந்து நாற்பத்தொண்ணாயிரம் வேளாண்குடிகளைப் பாண்டி நாட்டிற் குடியேற்றினர் என்றும் தெக்கத்தூர், சுப்பிரமணியவேளார் என்பாரிடம் உள்ள ஒரு ஒலைச்சுவடியில் குறித்திருக்தகிறது. குறும்பரைத் துரத்தியடித்து வெள்ளாளர் தங்களை நிலத்தலைவராகச் செய்துகொண்டிருக்க வெண்டும். வெள்ளாளரைப் பற்றிய சாசனங்களெல்லாம் அவர்களை 'நிலத்தரசு' என்றே குறிப்பிடுகின்றன. சோழ பாண்டியரைப்போல் முடியரசாக இல்லாமை பற்றியே நிலத்தரசு என்று குறிப்பிட்டடிருக்கவேண்டும். நெடுங்காலம் வெள்ளாளர் நலத்திலும் பலத்திலும் மிக்கு வாழ்ந்தனர். அதன் பின், கோனாடானது சம்மதிராயர் கடம்பராயர், மாளுவராயர், கொங்குராயர், கலிங்கராயர், அச்சுதராயர், குமதராயர் என்ற தலைவர்களிடம் கீழ்ப்பட்டிருந்தது.



நான் தெளிவாக எழுத வில்லை யென்றாலும் தங்களது சந்தேகங்களை எனத தளத்தில் பண்டித நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களின் கள்ளர் சரித்திரத்தில் பாருங்கள்.



http://ennar.blogspot.com/2006/03/1.html


Wednesday, August 09, 2006

சிவாஜியை ஏன் அவமானப்படுத்த வேண்டும்


புதுடெல்லி, ஆக. 9-

சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அரசு நிறுவியுள்ளது.

சிலையை அந்த இடத்தில் வைக்ககூடாது என்று சீனி வாசன் என்பவர் ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடற்கரை சாலையில் சிலை வைப்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது என்றும் மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்க வேண்டும் என்று கூறியது. சிலை வைக்கவும் அனுமதி அளித்தது.

இதையடுத்து சமீபத்தில் கடற்கரை சாலையில் சிவாஜி சிலை திறக்கப்பட்டது. முதல்- அமைச்சர் கருணாநிதி இந்த சிலையை திறந்து வைத்தார்.

இந்த நிலையில் சிவாஜி சிலை திறக்கப்பட்டதை எதிர்த்து சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக் கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் 2003-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு உறுதிமொழி அளித்தது. அந்த உறுதி மொழியில் போக்கு வரத்துக்கு இடைïறாக முக்கிய சாலைகளில் தற் காலிக அல்லது நிரந்தர கட்டு மானங்கள் எதையும் அனு மதிக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தது.

ஆனால் சிவாஜி சிலையை கடற்கரை சாலையில் வைத்த தால் போக்குவரத்துக்கு இடை ïறாக உள்ளது. சிலை நிறுவும் விழாவுக்காக சாலையின் நடுவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு அளித்த உறுதிமொழி மீறப்பட்டிருக்கிறது. இது உச்சநீதி மன்றத்தை அவமதிக்கும் செயல்.

தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகி இருக்கிறது.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மாலை மலர் செய்தி

நடிகர் திலகத்துக்கு அந்த இடத்தில் சிலை வைத்து; ஏன் அவரை இந்த அளவிற்கு அவமானப் படுத்த வேண்டும் அங்கு சிலை வைக்கக் கூடதென நியதிகள் இருக்கும் நிலைப்பாட்டில் அது தவறுதானே . அவரது சிலையை வைத்து பிறகு அதையே சாக்காக வைத்து மற்றவர்களுக்கும் சிலை வைப்பதற்கு முன்னோடியாகவா?
நல்ல நடிகர் தேசிய நடிகர் தமிழர் இவர் அந்த காலம் தொட்டே பொறாமையின் காரணமாக எள்ளிநகையாடப்பட்டவர். எது எப்படியிருப்பினும் தனது கொள்கையில் வீர நடைபோட்ட சிம்மக்குரலோனை இவ்வாறு சந்தியில் நிருத்தியது வருத்தத்தைத் தான் தருகிறது. வாழ்க்கையில் யாரும் அனுபவிக்காத கஷ்டங்களை அனுபவித்து வந்தவர். அவருக்குப் போய் இப்படியா?

சிவாஜியின் தாத்தா இறந்துபோன பிறகு, ராஜாமணியம்மாள் குடும்பத்துடன் . திருச்சி அருகே, சங்கிலியாண்டபுரத்தில் ராஜாமணி அம்மாள் குடும்பத்துக்கு ஒரு வீடு இருந்தது. அங்கு வசிக்கலானார். சிவாஜிகணேசன் வளர்ந்தது, நாடக நடிகரானது, சினிமா உலகில் புகுந்தது எல்லாமே இந்த வீட்டில் வசித்த போதுதான்.

எஸ்.எஸ்.வாசனின் தாயாரும், எம்.ஜி.ஆரின் தாயாரும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற எப்படி கஷ்டப்பட்டார்களோ, அதுபோல் ராஜாமணி அம்மாளும் மிகவும் கஷ்டப்பட்டார். `தந்தையோ இறந்து போய்விட்டார். கணவர் சிறை சென்று விட்டார் (சுதந்திரப் போராட்டச் சிறை). பிழைக்க என்ன செய்வது? குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது' என்று யோசித்த ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்ய முடிவு செய்தார். கறவை மாடு வாங்கி, பால் விற்கத் தொடங்கினார். நாளடைவில், ராஜாமணி அம்மாள் என்ற பெயர் மறைந்துபோய், ``பால்காரம்மா" என்ற பெயர் நிலைத்து விட்டது!

ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு வந்தார். ``என்ன ராதாகிருஷ்ணா! என் வீட்டுக்குப் போனாயா? எல்லோரும் சவுக்கியமா?" என்று சிவாஜி விசாரித்தார். ``எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உனக்கு ஒரு துயரச்செய்தி கணேசா!" என்று கூறினார்,

ராதாகிருஷ்ணன். ``என்ன?" என்று பதற்றத்துடன் சிவாஜி கேட்க, ``உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார்" என்று கூறினார், காக்கா ராதாகிருஷ்ணன்.

சிவாஜி பதறினார். உள்ளே சென்று தனியாக அழுதார். ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி தரவில்லை. சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு அண்ணன் கனகசபாநாதனும் இறந்துபோனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக முடியவில்லை. முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

சிவாஜிக்கு 12 வயதான போது, நாடகக் குழுவினர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று முகாமிட்டனர். சிவாஜிக்கு பெற்றோரை பார்க்கவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது. ``தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று கம்பெனி நிர்வாகிகளிடம் கெஞ்சினார். அவர்கள் மனம் இரங்கி, சிவாஜியை அனுப்பி வைத்தனர். வீட்டுக்குப்போனதும், சிவாஜி முதலில் பார்த்தது தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும்தான். சிவாஜிகணேசன் குடும்பத்தைப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது, 3 அண்ணன்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் 2 பேர் இறந்து

போய்விட்டார்கள். தான் நாடகக்கம்பெனில் சேர்ந்த பிறகு பிறந்த தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும் அப்போதுதான் முதன் முதலாக சிவாஜி பார்த்தார். பாசத்தோடு தழுவிக்கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பின் சிவாஜியைப் பார்த்த தாயார் ராஜாமணி அம்மாள் கண்ணீர்விட்டு அழுதார்.பிறகு தந்தையையும், அண்ணனையும் சிவாஜி சந்தித்தார். சிறிது நேரம் அவர்களால் பேசவே முடிவில்லை. அந்த தீபாவளியை பெற்றோருடனும், அண்ணன், தம்பி, தங்கையுடனும் கொண்டாடி மகிழ்ந்தார், சிவாஜி.

பஸ் கம்பெனியில் ``மெக்கானிக்" ஆக வேலைபார்த்தார் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா? ஆனால், அது உண்மை. மாதம் 7 ரூபாய் சம்பளத்தில், அவர் திருச்சி ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்" (டி.எஸ்.டி.) என்ற பஸ் கம்பெனியில் ``மெக்கானிக்" வேலை பார்த்திருக்கிறார்.

கொல்லங்கோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு நடந்தே சென்றார்கள். காட்டுப்பாதையில் 40 மைல் நடக்க வேண்டும். வழியில் பலத்த மழை பிடித்துக்கொண்டது. மழையில் நனைந்து கொண்டே சென்றார்கள். வழியில், ``ஐயோ" என்று தங்கவேலு அலறினார். சிவாஜி திரும்பிப்பார்த்தார். தங்கவேலுவின் கால் அருகே ஒரு பாம்பு நெளிந்து போய்க்கொண்டு இருந்தது. தங்கவேலுவை பாம்பு கடித்துவிட்டது என்பதை சிவாஜி உணர்ந்து கொண்டார். அலறிக்கொண்டிருந்த தங்கவேலுவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டார். தங்கவேலுவின் தாயாரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். அங்குள்ளவர்கள், வைத்தியரை அழைத்து, தங்கவேலுவுக்கு தகுந்த சிகிச்சை அளித்தார்கள். தங்கவேலு பிழைத்துக்கொண்டார். பிறகு கிராமவாசிகளின் உதவியுடன் சிவாஜியும், தங்கவேலுவும், அவர் தாயாரும் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து திருச்சிக்கு போய்ச்சேர்ந்தார்கள்.

இது இன்னமும் உண்டு அவர் சொல்லுவார் ," கக்கன்ஜி கதையைக் கேட்டால் விக்கி விக்கி அழுவனும் " என்று அண்ணன் சிவாஜியின் கதையைக் கேட்டால் ஓ வென்றே அழனும்.

பிறகு மீத முள்ளவற்றை எழுதுகிறேன்.

Monday, August 07, 2006

இலங்கை - விடுதலைப்புலி - மொஸாட்

இலங்கைக்குள் நுழைந்தது மொஸாட் பின்னர் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் ராணுவத் தொடர்டபை ஏற்படுத்தினார்கள். இலங்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்கள், ஆயுதங்கள், கடலோர காவலுக்கான படகுகள் எல்லாமே இஸ்ரேல் கொடுத்ததுதான். சிங்களர்காடு மட்டுமல்ல!! வடபகுதியிலுள்ள விடுதலைப் புலிகளுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதுதான் அவர்களின் சாமார்த்தியம்.. ஒருபுறம், புலிகளிடமிருந்து காத்துக் கொள்ள இலங்கை ராணுவத்துக்கு ஆயுத சப்ளை. இன்னொருபுறம், இலங்கை ராணுவத்தின் முயற்சிகளை முறியடிக்கப் புலிகளுக்கும ஆயுத சப்ளை!

விவசாயிகள் பிரச்னை எப்போதுமே இலங்கைக்கு ஒரு பெரும் தலைவலி இந்த தலைவலியைப் போக்க, வேலையற்ற விவசாயிகளைப் பரவலாக்கி, அவர்களுக்கு வேலை கொடுக்க நினைத்தது அரசு, 'இலங்கையில் பாயும் மாஹாவேலி நதியை அதன் போக்கிலிருந்து மாற்றி தீவின் மறுபுறமிருக்கும் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் பிரச்சனையைத் தீர்க்கலாம்' என்று திட்டம் போட்டுக்கொடுத்தது மொஸாட் . இது இலங்கைக்குப் பேருதவியாக அமைந்தது. இதனால் ஏக லாபம் கிடைக்க...

பிரமித்துப்போன அன்றைய அதிபர் மொஸாட்டின் தீவிர ரசிகனாகவே பின்னாளில் மாறிப் போனார். உண்மையில் மாஹாவேலி திட்டமே உலக வங்கியிலிருந்து கடன் வாங்கி, இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்குவதற்குத்தான்.

23-07-06

ஜுனியர் விகடனில்

Saturday, August 05, 2006

மூதூர் மக்களின் அவலம்
























ஆதிக்க ஆசையினால் அல்லலுறும் மக்கள் குடும்பம் குடும்பமாக சொத்துளையும் சுகத்தை பாசத்தையும் நேசத்தையும் வீட்டை விட்டு உயிர் மட்டும் இருந்தால் போதும் மற்றவைகளைக் தேடிக்கலாம் என என்ன நடக்குமோ உண்ண உணவு கிடைக்குமோ! குடிக்க தண்ணீர் கிடைக்குமோ!! இருக்கத் தான் வீடு கிடைக்குமோ!! எங்களுக்கு ஏன் இந்த அவல நிலை? என வெளியேறும் மக்கள்.

Thursday, August 03, 2006

ஆடிப்பெருக்கு


திருச்சியில் இன்று ஆடிப்பெருக்கு

Sunday, July 30, 2006

பஹ்ரைனில் தீவிபத்து

இன்றைய செய்தி: தினமலரில்

மனாமா (பஹ்ரைன்): பஹ்ரைன் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 16 இந்தியர்கள் பலியாயினர்.

மனாமா பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர் முகாமில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 5 மணி அளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 16 இந்தியர் பலியாயினர். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். சுமார் 80 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இறந்தவர்களில் பலர் ராயல் டவர்ஸ் கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் என பஹ்ரைன் நாட்டிற்கான இந்திய துõதர் பாலகிருஷ்ணன் ஷெட்டி தெரிவித்தார். மூச்சு திணறல் காரணமாகவே பலர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

இந்த முகாமில 218 பேர் தங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் 350க்கும் மேற்பட்டோர் இருந்ததாக அங்குள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக அந்த நாட்டில் உள்ள இந்திய துõதரகத்துடன் மத்திய அரசு தொடர்பு கொண்டது. இதையடுத்து, பலியானவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


.


.

Thursday, July 27, 2006

ராஜீவை தாக்கியவனின் வாகுக் மூலம்



19 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிலங்கா தலைநகர் கொழும்பில் நடைபெற்ற அணிவகுப்பு மரியாதையின் போது "இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் தலைக்குத்தான் இலக்கு வைத்துத் தாக்கினேன். அது மரணத்தை ஏற்படுத்தக் கூடியது- அதுவே என் நோக்கம்" என்று தாக்குதலை நடத்திய சிறிலங்கா கடற்படையைச் சேர்ந்த பேரின வெறியரான விஜித ரோகன விஜயமுனி பகிரங்க வாக்குமூலம் அளித்துள்ளார்.

Wednesday, July 26, 2006

சிவாஜி கணேசன்

இருந்தது. தங்கவேலுவை பாம்பு கடித்துவிட்டது என்பதை சிவாஜி உணர்ந்து கொண்டார். அலறிக்கொண்டிருந்த தங்கவேலுவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டார். தங்கவேலுவின் தாயாரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். அங்குள்ளவர்கள், வைத்தியரை அழைத்து, தங்கவேலுவுக்கு தகுந்த சிகிச்சை அளித்தார்கள். தங்கவேலு பிழைத்துக்கொண்டார். பிறகு கிராமவாசிகளின் உதவியுடன் சிவாஜியும், தங்கவேலுவும், அவர் தாயாரும் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து திருச்சிக்கு போய்ச்சேர்ந்தார்கள்.

Friday, July 14, 2006

வவுனியாவர் விடுதலைப்புலிகளுக்கும் தமிழ் ஈழமக்கள் விடுதலை இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அந்த இயக்கத்தை சேர்ந்த பிரமுகர் ரத்தினம் ஸ்ரீகண்டராஜா கொல்லப்பட்டார்.

இன்னொரு இடத்தில் இதேபோல் நடந்த மோதலில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தமிழர் இயக்கத்தை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சண்டை நடந்த இடத்தில் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினார்கள். கொல்லப்பட்ட 2 பேர் உடல்களையும் போலீசார் மீட்டனர்.

ஏன் ஒரு உறையில் இரண்டு வாள் இருக்கக்கூடாதெனவா?

Tuesday, July 11, 2006

பணத்தூது

"வாழ்வதும் உன்னுடைய வாழ்வாமே வாழ்வொழித்துத்
தாழ்வதுவும் உன்னுடைய தாழ்வாமே--கூழ்குடித்துக்
கட்டப் புடைவையின்றிக் கந்தையுமாய்ச் சென்றுசெலவர்
கிட்டப் பலகாலும் கெஞ்சிப்போய் -- முட்டமுட்டத்
தாங்குவா ரற்றுத் தடுமாறி ராப்பகலாய்
ஏங்குவார் ஏக்கம்உன் ஏக்கமே--ஓங்கும்
பணமென்னும் உன்னைப் படைக்காத சென்மம்
பிணமென்பர் கண்டாய் பெரியோய்"

இதற்கு விளக்கம் தேவையில்லை

Monday, July 10, 2006

சீதையின் தூது

"மலையே மரனே மயிலே குயிலே
மலையே பிணையே களிறே பிடியே
நிலையா உயிரே நிலைதே றினிர்போய்
உலயா வலியார்உழைநீர் உரையீர்"

'மலைகளே, மரங்களே, மயில்களே, குயில்களே, மான்களே, மற்றுமுள்ள உயிர்களே! நீங்களே என் நாயகரிடம் சென்று என் நிலைமையை எடுததுரைக்க வேண்டும்' என்று கூறுகின்றாள். அந் நிலையில் விரிந்து பரந்த கோதாவரி யாற்றின் மீது விமானம் விரைந்து செல்கின்றது. அவ்வாற்றைப் பார்த்துச் சீதை போசுகிறாள்:
"கோதா வரியே குளிர்வாய் குழைவாய்
மாதா அனையாய் மனனே தெளிவாய்
ஓதா துணர்வார் உழைஓ டினைபோய்
நீதான் வினையேன் நிலைசொல் லலையோ"

என்று வின்னப்பம் செய்கிறாள்.
இங்ஙனம் அறியும் பொருள்களையும் அறியாப் பொருள்களையும், அசையும் பொருள்களையும், அசையாப் பொருள்களையும், பேசும் உயிர்களையும், பேசாப் பிராணிகளையும் நோக்கித் துன்பமுற்றவர்கள் உரையாடுதலால் அன்னார் மனத்திலு:ள்ள ஆற்றாமை ஒருவாறு தீரும்; உளளத்தைக் கவர்ந்து எழுகின்ற உணர்ச்சிக்கு ஒரு போக்கு விட்டவாறாகும்.

Saturday, July 08, 2006

சம்பந்தரின் நாரைத் தூது

திருச்செங்காட்டாங் குடியிலே கோயில் கொண்டருளும் தலைவனிடம் செங்கால் நாரையைத் தூதனுப்புகின்றார் திருஞானசம்பந்தர்.
"கான் அருகும் வயலருகும் கழியருகும் கடலருகும்
மீனஇரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேன் அமர்தார்ச் சிறுத்தொண்டன் செய்காட்டங் குடிமேய
வான் அமரும் சடையார்க்குஎன் வருத்தம் சென்றரையாயே"

என்பது அவர் பாடிய தேவராத் திருப்பாசுரம் 'வளமார்ந்த சோலைகளிலும், வயல்களிலும், கடற்கரைகளிலும் வயிறார இரை கொள்ளும் இள நாராய்! சிறுத்தொண்டன் பணி செய்த திருச்செங்காட்டங்குடியில் என்னையாளுடைய தலைவன் அமர்ந்திருக்கின்றாரன். அவனைக் காணாது நான் வாடி வருந்துகின்றேன். சடைமுடி சூடிய அப் பெருமானிடம் போந்து என் வருத்தத்தை எடுத்துரையாயோ ' என்று தலைவி முறையில் வேண்டுகின்றார் திருஞான சம்பந்தர்.

நாரைத் தூது

ஓர் ஏழைப் புலவர் சோழ நாட்டிலுள்ள சத்திமுற்றத்தை விட்டு, பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரைக்குச் சென்றார்; பாண்டி மன்னனைக் கண்டால் கலிதீரும் எனறு கருதி மாளிகையின் வாயிலை அடைந்தார். ஆனால் உள்ளே செல்ல முடியவில்லை. காலமோ கார் காலம். போர்க்த்துக்கொள்ள ஆடையின்றி வாடையால் நடுங்கினார் புலவர்; பொதுவிடமாகிய அம்பலத்திற் போந்த மாலைப்பொழுதில் மனம் வருந்தியிருந்தார். வறுமை நோயால் வாடிப் பாடுபடும் தன் மனைவியின் துயரம் அவர் மனத்திலே பொங்கி எழுந்தது. அப்பொழுது அவர் ஆகாய வழியாக ஒரு நாரை தன் பெடையோடு வடக்கு நோக்கிப் பறந்து செல்லக் கண்டார். அந்ரையை நயந்து நோக்கி தம மனைவியிடம் தூதுவிட்டார். வருமையில் தானே பாடல் வரும். சேர்ந்தே இருப்பது வருமையும் புலமையும் தானே.
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயுநின் பெடையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி

பாடுபார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
போழையு ளிருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே"

நாம் பள்ளியில் படித்தது தான் பலமுறை நமது நாவில் வலம் வந்த பாடல் தான்
நகர் வலம் வந்த மன்னனுக்கு தனது ஐயம் இந்த பாடலினால் நீங்கியதால் தனது ரத்தின கம்பளத்தை புலவருக்கு கொடுத்து விட்டு காலையில் வரச்சொல்லி சன்மானம் கொடுத்தார்

Friday, July 07, 2006

ஆட்சி மாற்றமும் நலத்திட்டமும்

சென்ற 2001 ஆம் ஆண்டு திமுகாவின் ஆட்சியில் தமிழ் நாடு விவசாய தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நலத்திட்டம் அவசரஅவசர மாக கொண்டுவரப்பட்டது. ஆட்சி மாறவும் அதை அம்போ என விட்டு விட்டது அதிமுக அரசு. 2005 ல் அதிமுக அரசு கொஞ்சம் மாற்றத்துடன் கொண்டு வந்து செயல் படுத்துவதற்குள் இந்த அரசும் போய்விட்டது மறுபடியும் திமுக அரசு வந்து அந்த இரண்டு திட்டத்தையம் ரத்துசெய்து விட்டு ஒரு புதிய திட்டமாக கொண்டு வரவிருக்கிறது. இதன் நிலை எப்படியோ? அந்த ஆண்டவனுக்குத் தான் தெரியும்.

Wednesday, July 05, 2006

சிட்டுக் குருவி சிட்டுக் குருவி சேதி தெரியுமா?

கோகினூர் வயிரம்
மயிலாசனம்
ராஜராஜசோழன் சிலை
இவைகள் கொள்ளை போனதே!!!!

ராஜராஜ சோழனின் சிலை குறித்த ஒரு சுவையான செய்தி நாம் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும். தஞ்சையை ஆண்ட மராட்டிய அரசர் சிவாஜி ராஜா போன்ஸ்லே என்பவர் 1855ஆம் ஆண்டு ஆண் வாரிசின்றி இறந்து போனார். டல்ஹவுஸியின் 'வாரிசின்மையால் அரசு அதிகாரம் இழத்தல்' என்ற கோட்பாட்டின்படி ஆங்கிலேயக் கும்பினி அரசு தஞ்சைப் பகுதியின் நிர்வாகத்தைத் தானே ஏற்றது. இதனை எதிர்த்து மராட்டிய அரசி காமாட்சி அம்பா பாயி சாகேப் முதலானோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கு பல்வேறு கட்டங்களைக் கடந்து 1916ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. நீதிமன்றத் தீர்ப்பின்படி தஞ்சைப் பெரிய கோயில் உட்பட 108 கோயில்களின் நிர்வாகம் மூத்த இளவரசர் எனப்பட்ட பெண் வழி வாரிசு ஒருவருக்கு உரியதாயிற்று. அந்த ஆண்டிலேயே தஞ்சைப் பெரிய கோயிலில் இருந்த ராஜராஜ சோழனின் சமகாலச் செப்புப் படிமம் விற்கப்பட்டது. அது இருந்த இடத்தில் உள்ளூர் ஸ்தபதி ஒருவரால் புதிதாகச் செப்புப் படிமம் ஒன்று வார்க்கப்பட்டு, அதன் பீடத்தில் "தஞ்சாவூர்ப் பெரிய கோயில் ராசா ராசேந்திர சோழ ராசா" என்றும் பொறிக்கப்பட்டது. இப் புதிய செப்புப் படிமமே ராஜராஜ சோழனின் பழைய செப்புப் படிமம் என்று தவறாகக் கருதப்பட்டு பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரால் இதற்கு முடிசூட்டும் விழாவும் நடத்தப்பட்டது. பூர்விகச் செப்புப் படிமம் தற்போது அஹமதாபாதிலுள்ள சாராபாய் அருங்காட்சியகத்தில் உள்ளது என்று தொல்லியல் கலை வரலாற்று அறிஞர் திரு. சி. சிவராம மூர்த்தி கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார்.
திண்ணையில் எஸ். இராமச்சந்திரன்
இவைகளைக் கொண்டு வரமுயற்சிக்க வேண்டாமா?