இலங்கைக்குள் நுழைந்தது மொஸாட் பின்னர் இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் ராணுவத் தொடர்டபை ஏற்படுத்தினார்கள். இலங்கைக்குத் தேவையான அனைத்துப் பொருட்கள், ஆயுதங்கள், கடலோர காவலுக்கான படகுகள் எல்லாமே இஸ்ரேல் கொடுத்ததுதான். சிங்களர்காடு மட்டுமல்ல!! வடபகுதியிலுள்ள விடுதலைப் புலிகளுடனும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டதுதான் அவர்களின் சாமார்த்தியம்.. ஒருபுறம், புலிகளிடமிருந்து காத்துக் கொள்ள இலங்கை ராணுவத்துக்கு ஆயுத சப்ளை. இன்னொருபுறம், இலங்கை ராணுவத்தின் முயற்சிகளை முறியடிக்கப் புலிகளுக்கும ஆயுத சப்ளை!
விவசாயிகள் பிரச்னை எப்போதுமே இலங்கைக்கு ஒரு பெரும் தலைவலி இந்த தலைவலியைப் போக்க, வேலையற்ற விவசாயிகளைப் பரவலாக்கி, அவர்களுக்கு வேலை கொடுக்க நினைத்தது அரசு, 'இலங்கையில் பாயும் மாஹாவேலி நதியை அதன் போக்கிலிருந்து மாற்றி தீவின் மறுபுறமிருக்கும் வறண்ட பகுதிகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் பிரச்சனையைத் தீர்க்கலாம்' என்று திட்டம் போட்டுக்கொடுத்தது மொஸாட் . இது இலங்கைக்குப் பேருதவியாக அமைந்தது. இதனால் ஏக லாபம் கிடைக்க...
பிரமித்துப்போன அன்றைய அதிபர் மொஸாட்டின் தீவிர ரசிகனாகவே பின்னாளில் மாறிப் போனார். உண்மையில் மாஹாவேலி திட்டமே உலக வங்கியிலிருந்து கடன் வாங்கி, இஸ்ரேலிடம் ஆயுதம் வாங்குவதற்குத்தான்.
23-07-06
ஜுனியர் விகடனில்
7 comments:
ஆம் அண்ணா நானும் படித்தேன்!!!
உளவு ஸ்தாபனங்கள் முயன்றால் நாட்டை அழிக்க கூடிய ஆற்றல் கொண்டவை
தகவலுக்கு நன்றி
நன்றி குமரன்
யார் இந்தக் கட்டுரைத் தொடர் எழுதுகிறார்கள்?
புலிகள் மொசாட்டிடம் பயிற்சி பெற்ற செய்தியை வேறும் சிலர் பயன்படுத்தியுள்ளர். தமிழ்சசி எழுதினார்.
ஆனால் இதில் எவ்வளவு உண்மை?
பொதுவாக எல்லாப் போராளிக்குழுக்களையும் புலிகள் என்று பார்த்த காலத்தில் எழுந்த கருத்தின் அடிப்படையில் இன்றுவரை இது பேசப்பட்டு வருகிறது என்றே நினைக்கிறேன்.
ஏனைய இயக்கங்கள் இஸ்ரேலிடம் பயிற்சி பெற்றன என்பது உண்மை. ஆனால் புலிகள் பயிற்சி பெற்றதாக எந்தக் கதையுமில்லை. பலர் எதையுமு புலியில் தொடங்கி புலியில் முடிப்பது வழமை.
ஏனைய இயக்கங்கள் போல் புலிகள் பாலஸ்தீனப் பேராளிகளிடமோ, இஸ்ரேலிடமோ பயிற்சி பெற்றதில்லை, அப்படிப் பயற்சி பெற்றிருக்கவும் சந்தர்ப்பமில்லை என்றே நினைக்கிறேன்.
மொசாட் சம்பந்தமாக அளவுக்கு மீறிப்புகழும் மனப்பாங்கு பொதுவாகக் காணப்படுவதுபோல் புலிகள் தொடர்பிலும் இருக்கிறது. இந்த விசயத்தில் இரண்டுமே சேர்ந்து புதிய கதையொன்றை உருவாக்குகிறது.
சுதாங்கன் என்பவர் எழுதுகிறார் ஜுனியர்விகடனில் அது பொய்யெனில் ஜு.வி ஒரு பிடியுங்களேன். அல்லது மின்னஞ்சல் கொடுங்கள். கண்டியுங்கள்
ஜூனியன் விகடன் கட்டுரைத் தொடரை நான் தொடக்கத்தில் படித்துவந்தேன். மொசாட் பற்றி வழமையான பயமுறுத்தல், அதீத புகழ்ச்சி என்பவற்றோடு அது தொடர்ந்தது. சலிப்பேற்பட்டு 3 வாரங்களாகப் படிக்கவில்லை. மொசாட் என்ற புத்தகத்தையும், முன்னாள் மொசாட் உறுப்பினரொருவர் எழுதிய இன்னொரு புத்தகத்தையும் வாசித்துவிட்டு, அங்கிங்கு உலாவும் மேலதிக கதைகள், கற்பனைகளையும் சேர்த்து சுவாரசியமாக வழங்குவதுதான் அக்கட்டுரைத்தொடர்.
'வஞ்சகத்தின் பாதையில்' என்ற முன்னாள் மொசாட் உறுப்பினரின் புத்தகத்தில் ஈழப்போராளிகளுக்கும் அரசதரப்புக்கும் ஒரே காலத்தில் வெவ்வேறாகப் பயிற்சி கொடுத்த சம்பவம் சொல்லப்படுகிறது.
இதை புலிகள் என்ற சொல்லால் குறிப்பது தனியே கட்டுரை ஆசிரியர் மட்டுமன்றி, வேறும் பலரும்தான். நான் ஏற்கனவே சொன்னது போல எல்லாக்குழுக்களையும் புலிகள் என்ற சொல்லால் குறித்த ஒரு காலத்தைய புரிதலின் தொடர்ச்சிதான் இது.
இன்னும் சிறப்பாகச் சொல்லப்போனால்,சூளைமேட்டில் ஒரு சட்டத்தரணி உட்பட மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த சம்பவத்தில் அச்சட்டத்தரணி கொல்லப்பட்டார். அதைச் செய்தது இன்று இந்திய அரசு கொஞ்சிக்குலாவும் டக்ளஸ் தேவானந்தா.
அன்று அவருக்கும் புலிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவர் ஈ.பி.ஆர்.எல்.எப் குழுவைச் சேர்ந்தவர்.
ஆனால் அச்சம்பவத்தைப் புலிகளுடன் சம்பந்தப்பட்டே அன்று பேசப்பட்டது.
இப்படித்தான் விமான நிலையக் குண்டுவெடிப்புட்பட சில சம்பவங்கள் புலிகள் என்ற பேரில் தவறாகப் பேசப்பட்டன.
இந்த மொசாட் கதையும் அன்றிலிருந்து இன்றுவரை அப்படியொரு பார்வையின் வெளிப்பாடாகவே இருக்கிறது.
போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்குப் போனவர்களையே கொலைசெய்யும் கொடூரம் இலங்கையில் தான் நடக்கிறது.
இனி செஞ்சிலுவை சங்கம் கூட தலையிட யோசனை செய்யலாம்.
Mr.nextstep
அப்படித்தான் அந்த பத்திரிக்கையில் போட்டிருந்தது.
Post a Comment