Wednesday, August 09, 2006

சிவாஜியை ஏன் அவமானப்படுத்த வேண்டும்


புதுடெல்லி, ஆக. 9-

சென்னை கடற்கரையில் உள்ள காந்தி சிலை அருகில் நடிகர் சிவாஜிகணேசன் சிலையை அரசு நிறுவியுள்ளது.

சிலையை அந்த இடத்தில் வைக்ககூடாது என்று சீனி வாசன் என்பவர் ஏற்கனவே கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடற்கரை சாலையில் சிலை வைப்பது சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு முரணானது என்றும் மனுவில் கூறி இருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் விளக்கம் கேட்க வேண்டும் என்று கூறியது. சிலை வைக்கவும் அனுமதி அளித்தது.

இதையடுத்து சமீபத்தில் கடற்கரை சாலையில் சிவாஜி சிலை திறக்கப்பட்டது. முதல்- அமைச்சர் கருணாநிதி இந்த சிலையை திறந்து வைத்தார்.

இந்த நிலையில் சிவாஜி சிலை திறக்கப்பட்டதை எதிர்த்து சீனிவாசன் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக் கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

சுப்ரீம் கோர்ட்டில் 2003-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு உறுதிமொழி அளித்தது. அந்த உறுதி மொழியில் போக்கு வரத்துக்கு இடைïறாக முக்கிய சாலைகளில் தற் காலிக அல்லது நிரந்தர கட்டு மானங்கள் எதையும் அனு மதிக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தது.

ஆனால் சிவாஜி சிலையை கடற்கரை சாலையில் வைத்த தால் போக்குவரத்துக்கு இடை ïறாக உள்ளது. சிலை நிறுவும் விழாவுக்காக சாலையின் நடுவில் மேடை அமைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசு அளித்த உறுதிமொழி மீறப்பட்டிருக்கிறது. இது உச்சநீதி மன்றத்தை அவமதிக்கும் செயல்.

தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்புக்கு ஆளாகி இருக்கிறது.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.
மாலை மலர் செய்தி

நடிகர் திலகத்துக்கு அந்த இடத்தில் சிலை வைத்து; ஏன் அவரை இந்த அளவிற்கு அவமானப் படுத்த வேண்டும் அங்கு சிலை வைக்கக் கூடதென நியதிகள் இருக்கும் நிலைப்பாட்டில் அது தவறுதானே . அவரது சிலையை வைத்து பிறகு அதையே சாக்காக வைத்து மற்றவர்களுக்கும் சிலை வைப்பதற்கு முன்னோடியாகவா?
நல்ல நடிகர் தேசிய நடிகர் தமிழர் இவர் அந்த காலம் தொட்டே பொறாமையின் காரணமாக எள்ளிநகையாடப்பட்டவர். எது எப்படியிருப்பினும் தனது கொள்கையில் வீர நடைபோட்ட சிம்மக்குரலோனை இவ்வாறு சந்தியில் நிருத்தியது வருத்தத்தைத் தான் தருகிறது. வாழ்க்கையில் யாரும் அனுபவிக்காத கஷ்டங்களை அனுபவித்து வந்தவர். அவருக்குப் போய் இப்படியா?

சிவாஜியின் தாத்தா இறந்துபோன பிறகு, ராஜாமணியம்மாள் குடும்பத்துடன் . திருச்சி அருகே, சங்கிலியாண்டபுரத்தில் ராஜாமணி அம்மாள் குடும்பத்துக்கு ஒரு வீடு இருந்தது. அங்கு வசிக்கலானார். சிவாஜிகணேசன் வளர்ந்தது, நாடக நடிகரானது, சினிமா உலகில் புகுந்தது எல்லாமே இந்த வீட்டில் வசித்த போதுதான்.

எஸ்.எஸ்.வாசனின் தாயாரும், எம்.ஜி.ஆரின் தாயாரும் தங்கள் குடும்பத்தை காப்பாற்ற எப்படி கஷ்டப்பட்டார்களோ, அதுபோல் ராஜாமணி அம்மாளும் மிகவும் கஷ்டப்பட்டார். `தந்தையோ இறந்து போய்விட்டார். கணவர் சிறை சென்று விட்டார் (சுதந்திரப் போராட்டச் சிறை). பிழைக்க என்ன செய்வது? குழந்தைகளை எப்படி படிக்க வைப்பது' என்று யோசித்த ராஜாமணி அம்மாள், பால் வியாபாரம் செய்ய முடிவு செய்தார். கறவை மாடு வாங்கி, பால் விற்கத் தொடங்கினார். நாளடைவில், ராஜாமணி அம்மாள் என்ற பெயர் மறைந்துபோய், ``பால்காரம்மா" என்ற பெயர் நிலைத்து விட்டது!

ஒரு முறை காக்கா ராதாகிருஷ்ணன் கெஞ்சிக் கூத்தாடி, எப்படியோ அனுமதி பெற்று ஊருக்கு போய்விட்டு வந்தார். ``என்ன ராதாகிருஷ்ணா! என் வீட்டுக்குப் போனாயா? எல்லோரும் சவுக்கியமா?" என்று சிவாஜி விசாரித்தார். ``எல்லோரும் நன்றாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் உனக்கு ஒரு துயரச்செய்தி கணேசா!" என்று கூறினார்,

ராதாகிருஷ்ணன். ``என்ன?" என்று பதற்றத்துடன் சிவாஜி கேட்க, ``உன் அண்ணன் திருஞான சம்பந்தமூர்த்தி இறந்துவிட்டார்" என்று கூறினார், காக்கா ராதாகிருஷ்ணன்.

சிவாஜி பதறினார். உள்ளே சென்று தனியாக அழுதார். ஊருக்குப் போய்வர கம்பெனி நிர்வாகிகளிடம் அனுமதி கேட்டார். அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்களே தவிர, அனுமதி தரவில்லை. சில காலத்துக்குப் பிறகு, சிவாஜியின் இன்னொரு அண்ணன் கனகசபாநாதனும் இறந்துபோனார். அப்போதும் சிவாஜி தன் வீட்டுக்குப் போக முடியவில்லை. முக்கிய வேடங்களில் அவர் நடித்து வந்ததால், ஒரு நாள் கூட விடுமுறை கொடுக்க நாடகக் கம்பெனி நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

சிவாஜிக்கு 12 வயதான போது, நாடகக் குழுவினர் கோவையில் இருந்து பொள்ளாச்சிக்கு சென்று முகாமிட்டனர். சிவாஜிக்கு பெற்றோரை பார்க்கவேண்டும் என்று ஆவல் அதிகரித்தது. ``தீபாவளிக்காவது என்னை ஊருக்கு அனுப்பி வையுங்கள்" என்று கம்பெனி நிர்வாகிகளிடம் கெஞ்சினார். அவர்கள் மனம் இரங்கி, சிவாஜியை அனுப்பி வைத்தனர். வீட்டுக்குப்போனதும், சிவாஜி முதலில் பார்த்தது தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும்தான். சிவாஜிகணேசன் குடும்பத்தைப் பிரிந்து நாடகக் கம்பெனியில் சேர்ந்தபோது, 3 அண்ணன்கள் மட்டுமே இருந்தனர். அவர்களில் 2 பேர் இறந்து

போய்விட்டார்கள். தான் நாடகக்கம்பெனில் சேர்ந்த பிறகு பிறந்த தம்பி சண்முகத்தையும், தங்கை பத்மாவதியையும் அப்போதுதான் முதன் முதலாக சிவாஜி பார்த்தார். பாசத்தோடு தழுவிக்கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பின் சிவாஜியைப் பார்த்த தாயார் ராஜாமணி அம்மாள் கண்ணீர்விட்டு அழுதார்.பிறகு தந்தையையும், அண்ணனையும் சிவாஜி சந்தித்தார். சிறிது நேரம் அவர்களால் பேசவே முடிவில்லை. அந்த தீபாவளியை பெற்றோருடனும், அண்ணன், தம்பி, தங்கையுடனும் கொண்டாடி மகிழ்ந்தார், சிவாஜி.

பஸ் கம்பெனியில் ``மெக்கானிக்" ஆக வேலைபார்த்தார் என்றால் நம்ப முடியவில்லை அல்லவா? ஆனால், அது உண்மை. மாதம் 7 ரூபாய் சம்பளத்தில், அவர் திருச்சி ஸ்ரீரங்கம் டிரான்ஸ்போர்ட்" (டி.எஸ்.டி.) என்ற பஸ் கம்பெனியில் ``மெக்கானிக்" வேலை பார்த்திருக்கிறார்.

கொல்லங்கோட்டில் இருந்து பொள்ளாச்சிக்கு நடந்தே சென்றார்கள். காட்டுப்பாதையில் 40 மைல் நடக்க வேண்டும். வழியில் பலத்த மழை பிடித்துக்கொண்டது. மழையில் நனைந்து கொண்டே சென்றார்கள். வழியில், ``ஐயோ" என்று தங்கவேலு அலறினார். சிவாஜி திரும்பிப்பார்த்தார். தங்கவேலுவின் கால் அருகே ஒரு பாம்பு நெளிந்து போய்க்கொண்டு இருந்தது. தங்கவேலுவை பாம்பு கடித்துவிட்டது என்பதை சிவாஜி உணர்ந்து கொண்டார். அலறிக்கொண்டிருந்த தங்கவேலுவை தூக்கி தோளில் போட்டுக் கொண்டார். தங்கவேலுவின் தாயாரையும் அழைத்துக்கொண்டு, ஓட்டமும் நடையுமாக அருகில் உள்ள ஒரு கிராமத்தை அடைந்தார். அங்குள்ளவர்கள், வைத்தியரை அழைத்து, தங்கவேலுவுக்கு தகுந்த சிகிச்சை அளித்தார்கள். தங்கவேலு பிழைத்துக்கொண்டார். பிறகு கிராமவாசிகளின் உதவியுடன் சிவாஜியும், தங்கவேலுவும், அவர் தாயாரும் பொள்ளாச்சி சென்று, அங்கிருந்து திருச்சிக்கு போய்ச்சேர்ந்தார்கள்.

இது இன்னமும் உண்டு அவர் சொல்லுவார் ," கக்கன்ஜி கதையைக் கேட்டால் விக்கி விக்கி அழுவனும் " என்று அண்ணன் சிவாஜியின் கதையைக் கேட்டால் ஓ வென்றே அழனும்.

பிறகு மீத முள்ளவற்றை எழுதுகிறேன்.

30 comments:

கோவி.கண்ணன் said...

நடிகர் திலகம் சிவாஜி பற்றிய நெகிழ்வான பதிவு... என்னார் நன்றாக இருக்கிற்து !!!

ENNAR said...

நன்றி கணணன்
அன்று சிவாஜி சினிமா போஸ்ட்டர்களில் சாணத்தால் அடிப்பது அவரை தொந்தி கணேசன் என்பது போன்ற அவர் அனுபவித்து வந்த தொந்தரவுகள் கொஞ்சமல்ல. இன்று இறந்தும் அவரைப் பற்றி அசிங்கமாக பேசுவது தான் கஷ்டம்

துளசி கோபால் said...

எல்லாம் புது விஷயமாக இருக்கு.

இன்னும் எழுதுங்க.

துபாய் ராஜா said...

நடிகர் திலகம் சிவாஜியார் வாழ்க்கையில்
நடந்த நாம் அறியாத பல விஷயங்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்.

ENNAR said...

துளசியக்கா
இது எல்லாம் பழசு ஒரு காலத்தில் சிவாஜி பக்த்தன் அவர் படங்கைத் தவிர அடுத்தவர் படங்களைப் பார்க்க மாட்டேன் அவரது ஓரங்க நாடக வசனங்களை மனப்பாம் செய்தவன் நான்.

ENNAR said...

நன்றி ராஜா எழுதுகிறேன்

ஜோ/Joe said...

என்னார் அவர்களே!
நடிகர் திலகம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களுக்கு நன்றி!

யார் என்ன சொன்னால் என்ன ,அவர் துறையில் அவர் சக்கரவர்த்தி!

ENNAR said...

ஆமாம் ஜோ அவரும் அப்படித்தான் யார் என்ன சொன்னாலும் தனது கொள்ளைப்படி நடந்தார் ஒன்று நம் ஏமாற்றி விட்டார் கடைசியாக சிவாஜி மன்னராக நடிப்பேன் என்று சொன்னார் அதை அவர் செய்யவில்லை.

ஜோ/Joe said...

என்னார் அவர்களே!
நான் உங்கள் தலைமுறையைச் சேர்ந்தவன் அல்ல .ஆனால் உங்களைப் போலவே நானும் ஒரு சிவாஜியின் வெறித்தனமான ரசிகன் .இன்றுள்ள தலைமுறையும் கூட நடிகர் திலகத்தை ஒரு மாபெரும் நடிகனாக அறிந்துள்ளனர் .அங்கீகரிக்கின்றனர் .அந்த சிறப்பு அவரளவுக்கு வேறு யாருக்கும் இல்லை.

G.Ragavan said...

நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான். நடிப்புக்கு இலக்கணமும் அவர்தான். அவரைப் பற்றிய இந்தத் தொடரை நான் மனமாற வரவேற்கிறேன்.

ஜோ சொல்வது போல, நான் சின்னப்பிள்ளையாக இருக்கும் பொழுது முதல்மரியாதை காலகட்டம். அதற்குப் பிறகு எத்தனை சிவாஜி படங்கள் வந்திருக்கும். ஆனாலும் நான் அவரது ரசிகன்.

ENNAR said...

ஜோ,
பாம்பின் கால் பாம்பரியும்
அதாவது பாம்பு இருக்குமிடத்தை அந்த பாம்புக்குத்தான் தெரியும் என்பார்கள் கற்றாரை கற்றாரே காமுறுவர்
அது போல நல்ல நடிப்புபற்றி நல்ல ரசிகனுக்குத் தான் தெரியும். நாம் எல்லாம் அப்படித்தான்.

ENNAR said...

ராகவன்,

எனது சீனியர்கள் நடிகர் திலகத்தின் நாடகத்தைப் பார்க்க மாட்டுவண்டி கட்டிக்கொண்ட போன கதையைச் சொல்லுவார்கள். சிவாஜி எங்கள் ஊரில் புஞ்சை நிலங்கள் வாங்கியிருந்தார் அதை பொறியில் கல்லூரிக்கு அரசு எடுத்துக் கொண்டது. நான் பலமுறை கணேசனை பாத்திருக்கேன் (எங்கள் பகுதியில்) நான் படித்து பள்ளிக்குக் கூட கட்டிடம் கட்ட அந்த காலத்திலே ரூ15,000-ம் கொடுத்தார். அது வெல்லாம் பழைய கதை. அரசியில் அதிருஷ்ட்டம் இல்லாதவர். அதுவும் எனக்குப் பிடிக்காது.

லக்கிலுக் said...

////நடிகர் திலகத்துக்கு அந்த இடத்தில் சிலை வைத்து; ஏன் அவரை இந்த அளவிற்கு அவமானப் படுத்த வேண்டும் //////

தமிழனுக்கு சிலை வைப்பதாக இருந்தாலும் சரி.... தமிழருக்காக போராடியத் தலைவன் வாழ்க்கை வரலாறை படமாக எடுக்க நிதி கொடுத்தாலும் சரி.... ஒரு கும்பல் எதிர்த்துக் கொண்டுதான் இருக்கும்....

இன்றைக்கு நேற்றைக்கா இதை செய்கிறார்கள்.... ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக இதைத்தானே செய்கிறார்கள்.....

உங்கள் நண்பன்(சரா) said...

என்னார்,
நல்ல பதிவு,
திரு.சிவாஜிகணேசன் பற்றி தாங்கள் கூறுவதை பார்த்தால் அவரின் மேல் மரியாதையும், பிரமிப்பும் ஏற்படுகின்றது,

தொடர்ந்து எழுதுங்கள்...


அன்புடன்...
சரவணன்.

ENNAR said...

Thanks for your comment Mr. PULIKUTTY
Glitters not gold

ENNAR said...

நன்றி சரவணன் எழுதுகிறேன்

ENNAR said...

luckylook
இல்ல அந்த இடத்தில் சிலை வைக்கக் கூடாது என்றால் கூடாது தான். அதில் யாருக்கும் மாறுபட்ட கருத்துக் கிடையாது.
விதி மீறலை சிவாஜி ஏற்றுக் கொள்பவரல்ல எனக்குத் தெரிந்தவரை

வெற்றி said...

என்னார்,
நடிகர் திலகம் பற்றி நான் அறிந்திராத பல தகவல்களைப் பதிந்தமைக்கு மிக்க நன்றி. நடிகர் திலகத்தின் பரம இரசிகன் நான். அவர் தமிழர்களின் சொத்து. யாழ்ப்பாண மண்ணை சிங்கள ஆக்கிரமிப்புப் படைகளிடமிருந்து மீட்ட பின்னர் கவியரசருக்கும், நடிகர் திலகத்திற்கும் யாழ் மண்ணிலும் சிலை எழுப்ப வேண்டும் என்பதே என் ஆசை.

லக்கிலுக் said...

////இல்ல அந்த இடத்தில் சிலை வைக்கக் கூடாது என்றால் கூடாது தான். அதில் யாருக்கும் மாறுபட்ட கருத்துக் கிடையாது. /////

உங்களுக்கு கிடையாது என்று சொல்லுங்கள்....

சிவாஜி சிலை திறப்பு விழாவில் தமிழகமெங்கும் இருந்து கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முட்டாள்கள்.... நீங்கள் மட்டும் அறிவாளியா?

அந்த இடத்துக்கு முதலில் சென்றிருக்கிறீர்களா? அது எப்படி போக்குவரத்துக்கு இடைஞ்சம் என்று விளக்குவீர்களா? ஏற்கனவே அங்கே கடிகார மணிக்கூண்டு இருப்பது தெரியுமில்லையா? கடிகார மணிக்கூண்டு டிராபிக்குக்கு இடைஞ்சல் கிடையாது.... சிவாஜிக்கு சிலை வைத்தால் தான் இடைஞ்சல் என்று கூறுவது முட்டாள்தனமாக இல்லையா?

ENNAR said...

வெற்றி
நல்லது தங்கள் விருப்பம்
நிறைவேற என்னுடைய வாழ்த்துகள்

ENNAR said...

luckylook
உங்களுக்கு இவ்வளவு கோபம் ஏன் வருகிறது, அந்த இடத்தில் சிலை வைக்கக்கூடாது என நியதி இருப்பது உண்மையா பொய்யா? அப்படி ஒரு தடை உள்ளது மெய்யா? பொய்யா? எனது முதல் கேள்வியே எனது பதிவில் அதுதான்.
அப்படி தடையிருக்கும் பட்சத்தில் ஏன் அங்கு சிலையை வைத்து சிக்கலை உண்டாக்க வேண்டும்.
யார் அறிவாளி, முட்டாள் என்பதல்ல
அன்று சிவாஜியை திமுக விலிருந்து விட்டியது யார் தெரியுமா? அவரை அன்று அவமானப்படுத்தியது யார் தெரியுமா? சிவஜியின் மனவேதனைப் பாருங்கள்

1956-ல் ஒரு புயல் வந்து, பல இடங்களில் மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டது. "புயல் நிவாரணத்துக்காக எல்லோரும் பணம் வசூலித்துக் கொடுங்கள்" என்று அறிஞர் அண்ணா
கூறினார்கள். அப்போது நானும் சென்று வசூல் செய்தேன். விருதுநகரில், தெருவில் சென்று துண்டை விரித்து, பராசக்தி வசனம் பேசி, பணம் வசூல் செய்தேன். நிறைய பணம் சேர்ந்தது. அதைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு, படப்பிடிப்புக்காக நான் சேலம் சென்றுவிட்டேன். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

அழைப்பு இல்லை

அப்போது, அதிக அளவில் புயல் நிவாரண நிதி வசூலித்தவர்களுக்கு அண்ணா ஒரு பாராட்டு விழா வைத்தார். சேலத்தில் இருந்த நான், சென்னையில் இருந்த என் தாயாருக்கு டெலிபோன் செய்து, "இன்று விழா நடக்கிறதே! யாராவது எனக்கு அழைப்பு கொடுத் தார்களா?" என்று கேட்டேன். "இல்லை" என்று என் தாயார் கூறினார்கள். உடனே நான் சேலத்தில் இருந்து புறப்பட்டு, மாலை 4 மணிக்கெல்லாம் சென்னை வந்துவிட்டேன்.
விழாவிற்காக என்னை கூப்பிடுவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தேன். யாரும் என்னைக் கூப்பிட வரவில்லை. மாலை 6 மணி அளவில் தொடங்கிய பாராட்டுக் கூட்டத்தில் முதன் முதலாக எம்.ஜி.ஆரைக் கூட்டிச்சென்று, மேடையில் ஏற்றி கவுரவித்தார்கள். அதிகமாக நிதி வசூலித்தவன் நான்தான். ஆனால், எம்.ஜி.ஆர். அவர்களை அக்கூட்டத்தில் மேடை ஏற்றிப்
பாராட்டுகிறார்கள். "எங்கே கணேசன், வரவில்லையா?" என்று அண்ணா அவர்கள் கேட்டிருக்கிறார்கள். "இல்லை; கணேசன், `வரமுடியவில்லை' என்று சொல்லிவிட்டார் என்று அண்ணாவிடம் சிலர் கூறியிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி, என்னை பாதித்தது. பைத்தியம் பிடித்தவன் போல் ஆகிவிட்டேன். அண்ணன் எம்.ஜி.ஆருக்கும், கட்சிக்கும் அப்போது சம்பந்தமே கிடையாது. சின்னப்பிள்ளையில் இருந்து அந்த இயக்கத்தில் ஒட்டிக் கொண்டிருந்தவன் நான். என்னை ஒதுக்கி வைப்பதற்காகத்தான் இவ்வாறு செய்தார்கள். இதுதான் உண்மை.

பீம்சிங் அழைப்பு

நான் பல நாட்கள் வருத்தமாக இருந்தேன். ஒரு நாள் என் நெருங்கிய நண்பரான இயக்குனர் பீம்சிங் வந்தார். "சிவாஜி! ஏன் தலையில் கை வைத்துக் கொண்டு உட்கார்ந்து இருக்கிறீர்கள். திருப்பதிக்கு போய் வரலாம், வாருங்கள்" என்று அழைத்தார். நான் கோவிலுக்கு அதிகம் போனதில்லை. ஆனால் பீம்சிங் பிடிவாதமாகக் கூப்பிட்டு, திருப்பதிக்கு
அழைத்துச் சென்றுவிட்டார். திருப்பதி கோவிலில் அதிகாலை 4 மணிக்கு "விஸ்வரூப தரிசனம்" என்று ஒரு தரிசனம் உண்டு. அதைப் பார்த்துவிட்டுத் திரும்பினோம்.
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, "திருப்பதி கணேசா, கோவிந்தா" என்றெல்லாம் எழுதினார்கள்.
எனக்கு ஒரு புகலிடம் தேவைப்பட்டது. ஒரு வழிகாட்டியைத் தேடினேன். அப்போது எனக்கு ஒருவர் கிடைத்தார். அவர்தான் பெருந்தலைவர் காமராஜர். அவருடன் சேர்ந்தேன். அவரைத் தலைவராக ஏற்றுக்கொண்டேன். இந்த நிகழ்ச்சியால், எனது திரைப்பட வாழ்க்கை
பாதிக்கப்படவில்லை. "திருப்பதி கணேசா, கோவிந்தா" என்று சிலர் கேலி செய்த நேரத்தில், திருப்பதி ஏழுமலையான் கண் விழித்துப் பார்த்து அருள் புரிந்துவிட்டார். இதன் பிறகுதான், நான் ஸ்டூடியோவிலேயே 24 மணி நேரமும் தங்கி, மூன்று ஷிப்டாக வேலை செய்தேன்.
பெற்றோரை, மனைவியை பார்க்கமுடியவில்லை. குழந்தைகளைப் பார்க்கவில்லை. ஸ்டூடியோவுக்கு உள்ளேயே இருந்தேன். நான் நடித்த படங்கள் எல்லாம் மாபெரும் வெற்றிப்
படங்களாக அமைந்தன. மக்கள் பாராட்டைப் பெற்று, விருதுகள் வாங்கித் தந்தன."
இவ்வாறு சிவாஜிகணேசன் குறிப்பிட்டுள்ளார்.

லக்கிலுக் said...

////உங்களுக்கு இவ்வளவு கோபம் ஏன் வருகிறது, அந்த இடத்தில் சிலை வைக்கக்கூடாது என நியதி இருப்பது உண்மையா பொய்யா? அப்படி ஒரு தடை உள்ளது மெய்யா? பொய்யா? எனது முதல் கேள்வியே எனது பதிவில் அதுதான்./////

அண்ணே என்னார்....

அந்த இடத்தில் அப்படி ஒரு நியதி இருந்திருந்தால் சென்னை உயர்நீதிமன்றம் சிலை திறப்பு விழாவுக்கு அனுமதி கொடுத்திருக்குமா அண்ணே? உயர்நீதிமன்ற நீதிபதிகளை விட நியதி தெரிந்தவர்கள் நிறைய பேர் வலையுலகில் இருக்கிறார்கள் போல.... :-)

1998ஆம் ஆண்டு சிவாஜி பேசியதில் : "ஒருவருடைய வாழ்நாளில் கொஞ்சம் காலத்தை இன்னொருவருக்கு தர முடியும் என்றால் என் வாழ்நாளின் மீத நாட்களை கலைஞர் எடுத்துக் கொண்டு நூறாண்டுகாலம் வாழ வேண்டும்" இதைச் சொன்னபோது சிவாஜிக்கு கண்கள் கலங்கியிருந்தது.... கலைஞரும் கண்கலங்கினார்....

அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி பேத்திக்கு திருமணம் ஆனபோது கலைஞருக்கு சிவாஜி முறையான அழைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....

வரலாற்றைப் புரட்டிப் பார்த்தோமானால் காற்றடிக்கும் பக்கம் தான் சிவாஜி எப்போதும் சாய்ந்திருக்கிறார்....

அவர் ஒரு சிறந்த நடிகர் அவ்வளவு தான்.... மற்றபடி சுயநலமில்லாத பொதுநலவாதி என்பதெல்லாம் சுத்தப் பேத்தல்....

ENNAR said...

கன்னக்கோல் வைத்து திருடுபவர்கள் என்ன செய்வார்களாம் ? ஒரு மனித பொம்மையை செய்து தான் கன்னமிட்ட துவாரத்தின் வழியாக அந்த பொம்மை தலையை நீட்டுவானாம் அந்த வீட்டுகாரன் அல்லது காவலர்கள் பிடித்துக் கொண்டால் அல்லது தாக்கினால் இவர் தப்பித்துக் கொள்வார்.
இதே காதைதான் சிவாஜி சிலை விவகாரமும்.
கண்கலங்கியதையும்கண்டேன் கட்டிப்பிடித்ததையம் பார்த்தேன்
//அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜி பேத்திக்கு திருமணம் ஆனபோது கலைஞருக்கு சிவாஜி முறையான அழைப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது....//
இதன் காரணம் பலருக்கும் தெரியும்
சுயநலவாதிதான் இந்த உலகத்தில் யார் பொது நலவாதி நல்ல நடிகர் குடும்பத்துக்குள் ஒழுக்கமாக இருந்தவர் தாய் தந்தை தம்பி அண்ணன் பிள்ளைகள் என்ற கட்டுப்பாட்டுக்குள் இருந்தவர் தான். தனது தொழில் நடிப்பு என்ற நிலையில் இருந்தார் போர் வந்தால் நன்கொடை வசூல் செய்து கொடுத்தவர் அவ்வளவுதான் தியாகியெல்லாம் அவர் கிடையாது. வாரி வழங்கிய வள்ளலும் கிடையாது.
ஏமாற்று வேலையும் அவரிடம் கிடையாது இவரது செயல்கண்டு ஜான் கென்னடியே அமெரிக்காவிற்கு அழைத்தார் நாசர் பாராட்டினார் நேரு பாராட்டினார் அதுவெல்லாம் வேறு.

ஜோ/Joe said...

என்னார்,லக்கிலுக்,


ஆயிரம் கருத்து வேறுபாடுகள் ,சண்டைகள் முன்பு இருந்தாலும் அன்பு மாறவில்லை என்பதை கலைஞர் தெளிவாக கூறியிருக்கிறார் .நடிகர் திலகம் மறைந்து 5 ஆண்டுகளாக ஒரு முதல்வர் இருந்தாரே ! அவருடைய நாட்டிய அரங்கேற்றத்துக்கு தலைமை தாங்கியவர் நடிகர் திலகம் .உலகம் சுற்றும் வாலிபன் திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் வாய்ப்பு கொடுக்கவில்லை என்பதால் சேலத்தில் நடந்த சிவாஜி ரசிகர் மன்ற மாநாட்டில் சென்று நடிகர் திலகத்தை வானளாவப் புகழ்ந்து பேசியவர் இந்த அம்மையார் தான் .ஒரு காலத்தில் சிவாஜியோடு நடிக்க தவமிருந்திருப்பார் .ஆனால் முதல்வர் ஆன பிறகு எப்படியெல்லாம் அவரை அவமானப்படுத்தினார் ! அவர் இறந்த பின்பு கூட இவரால் அவரை கவுரவப்படுத்த முடியவில்லை .ஆனால் கலைஞர் முதல்வர் ஆனவுடன் உண்மையான அக்கரையுடன் நடிகர் திலகத்துக்கு சிலையெழுப்ப துடித்தார் .அந்த மாபெரும் கலைஞனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஓர் இடத்தில் சிலை நிறுவ வேண்டுமென்பதே அவர் எண்ணமேயன்றி வேறொன்றுமில்லை .சில வயித்த்ரிச்சல் பிடித்தவர்கள் தான் அதில் பிரச்சனைகளை உண்டு பண்ணுகிறார்கள்.

தயவு செய்து தேவையில்லாத இந்த அரசியல் விவாதத்தை தவிர்க்கலாமே!

// மற்றபடி சுயநலமில்லாத பொதுநலவாதி என்பதெல்லாம் சுத்தப் பேத்தல்....//

மற்றபல பொதுநலவாதிகளாக அறியப்பட்டவர்களைவிட சிவாஜி ஒன்றும் சுயநலவாதியல்ல.

ENNAR said...

ஜோ
//சேலத்தில் நடந்த சிவாஜி ரசிகர் மன்ற மாநாட்டில் சென்று நடிகர் திலகத்தை வானளாவப் புகழ்ந்து பேசியவர்//

திருச்சியில் நடந்த 250 படவிழா என நிணைக்கிறேன் அப்பொதும் சிவாஜியை புகழ்ந்து எம்ஜியாரை இகழ்ந்து ஜெயலலிதா பேசினார். 'தன்னைவிட அதிகமா நடித்து விட்டால் எம்ஜியார் அந்த காட்சியை கட் செய்து விடு வார் சிவாஜி நல்லா நடிக்க வேண்டும் என சொல்லிக் கொடுப்பார் சிறு நடிகைகளுடன் சிவாஜி ஒப்பந்தம் போட மாட்டார் ' என பேசினார்.

மனதின் ஓசை said...

எண்ணார்,
நிறைய புதிய சுவையான விஷயங்களை தெரிந்து கொண்டேன்.. ஜோ கூறியது போல் அரசியல் கலக்காமல் இந்த தொடர் சென்றால் மிக நன்றாக இருக்கும்...மீதமுள்ள பதிவுகளுக்கு காத்திருக்கிறேன்...தொடர்ந்து எழுதவும்..

ENNAR said...

மனதின் ஓசை
நன்றி அவ்வாறு தொடர்கிறேன்

ENNAR said...

சுதந்திர நாடல்லவா?

கால்கரி சிவா said...

செய்யும் தொழிலுக்கு மிகுந்த மரியாதை தந்தவர் சிவாஜி. தன்னுடன் உழைத்தவர்களை மறக்காதவர் சிவாஜி.

சிவாஜி சிவாஜி தான் அவர் நடை என்ன அவர் ஒரு புருவம் தூக்கி பார்க்கும் பார்வை என்ன ஆஹா அற்புத நடிகர் அவர்.

அவரைப் பற்றிய தங்களின் பதிவை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன் அவ்வபோது எனக்கு பிடித்த அவருடைய குணாதிசயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்

நல்லவன் said...

சிவாஜியைப் பற்றி அழகாக சொல்லியிருக்ரீர்கள்