Sunday, July 30, 2006

பஹ்ரைனில் தீவிபத்து

இன்றைய செய்தி: தினமலரில்

மனாமா (பஹ்ரைன்): பஹ்ரைன் நாட்டில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில் 16 இந்தியர்கள் பலியாயினர்.

மனாமா பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர் முகாமில் இன்று அதிகாலை இந்திய நேரப்படி 5 மணி அளவில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில் 16 இந்தியர் பலியாயினர். இவர்களில் பெரும்பாலோர் தமிழர்கள் என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார். சுமார் 80 பேர் காயம் அடைந்துள்ளனர்.

இறந்தவர்களில் பலர் ராயல் டவர்ஸ் கன்ஸ்ட்ரக்சன் என்ற நிறுவனத்தில் பணி புரிந்தவர்கள் என பஹ்ரைன் நாட்டிற்கான இந்திய துõதர் பாலகிருஷ்ணன் ஷெட்டி தெரிவித்தார். மூச்சு திணறல் காரணமாகவே பலர் உயிர் இழந்ததாக கூறப்படுகிறது.

இந்த முகாமில 218 பேர் தங்கி இருந்ததாக போலீசார் தெரிவித்தனர். ஆனால் 350க்கும் மேற்பட்டோர் இருந்ததாக அங்குள்ள தொழிலாளர்கள் தெரிவித்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பாக அந்த நாட்டில் உள்ள இந்திய துõதரகத்துடன் மத்திய அரசு தொடர்பு கொண்டது. இதையடுத்து, பலியானவர்களின் உடல்களை இந்தியா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.


.


.

2 comments:

கோவி.கண்ணன் said...

சன் டிவியில் மேற்கண்ட செய்தி பார்த்தேன். தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்றது போக இழப்பு என்பது படிப்பதற்கு வேதனையாக இருக்கிறத் :(

ENNAR said...

ஆமாம் என்ன செய்வது இது தான் தலைவிதி என்றால் என்ன செய்வது