Saturday, July 08, 2006

சம்பந்தரின் நாரைத் தூது

திருச்செங்காட்டாங் குடியிலே கோயில் கொண்டருளும் தலைவனிடம் செங்கால் நாரையைத் தூதனுப்புகின்றார் திருஞானசம்பந்தர்.
"கான் அருகும் வயலருகும் கழியருகும் கடலருகும்
மீனஇரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேன் அமர்தார்ச் சிறுத்தொண்டன் செய்காட்டங் குடிமேய
வான் அமரும் சடையார்க்குஎன் வருத்தம் சென்றரையாயே"

என்பது அவர் பாடிய தேவராத் திருப்பாசுரம் 'வளமார்ந்த சோலைகளிலும், வயல்களிலும், கடற்கரைகளிலும் வயிறார இரை கொள்ளும் இள நாராய்! சிறுத்தொண்டன் பணி செய்த திருச்செங்காட்டங்குடியில் என்னையாளுடைய தலைவன் அமர்ந்திருக்கின்றாரன். அவனைக் காணாது நான் வாடி வருந்துகின்றேன். சடைமுடி சூடிய அப் பெருமானிடம் போந்து என் வருத்தத்தை எடுத்துரையாயோ ' என்று தலைவி முறையில் வேண்டுகின்றார் திருஞான சம்பந்தர்.

2 comments:

குமரன் (Kumaran) said...

சம்பந்தப் பெருமானும் தலைவன் தலைவி பாவத்தில் இறைவனை வணங்கியிருக்கிறாரா? இதுவரை எனக்குத் தெரியாதது. மிக நல்ல தேவாரப் பாடல். நன்றி என்னார் ஐயா.

ENNAR said...

நன்றி குமரன்
ஆமாம்