Saturday, July 08, 2006

நாரைத் தூது

ஓர் ஏழைப் புலவர் சோழ நாட்டிலுள்ள சத்திமுற்றத்தை விட்டு, பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரைக்குச் சென்றார்; பாண்டி மன்னனைக் கண்டால் கலிதீரும் எனறு கருதி மாளிகையின் வாயிலை அடைந்தார். ஆனால் உள்ளே செல்ல முடியவில்லை. காலமோ கார் காலம். போர்க்த்துக்கொள்ள ஆடையின்றி வாடையால் நடுங்கினார் புலவர்; பொதுவிடமாகிய அம்பலத்திற் போந்த மாலைப்பொழுதில் மனம் வருந்தியிருந்தார். வறுமை நோயால் வாடிப் பாடுபடும் தன் மனைவியின் துயரம் அவர் மனத்திலே பொங்கி எழுந்தது. அப்பொழுது அவர் ஆகாய வழியாக ஒரு நாரை தன் பெடையோடு வடக்கு நோக்கிப் பறந்து செல்லக் கண்டார். அந்ரையை நயந்து நோக்கி தம மனைவியிடம் தூதுவிட்டார். வருமையில் தானே பாடல் வரும். சேர்ந்தே இருப்பது வருமையும் புலமையும் தானே.
"நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்குபிளந் தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயுநின் பெடையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி

பாடுபார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
போழையு ளிருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே"

நாம் பள்ளியில் படித்தது தான் பலமுறை நமது நாவில் வலம் வந்த பாடல் தான்
நகர் வலம் வந்த மன்னனுக்கு தனது ஐயம் இந்த பாடலினால் நீங்கியதால் தனது ரத்தின கம்பளத்தை புலவருக்கு கொடுத்து விட்டு காலையில் வரச்சொல்லி சன்மானம் கொடுத்தார்

12 comments:

ராபின் ஹூட் said...

கதை என்னான்னா,
பாண்டிய மன்னனுக்கு ஒரு சந்தேகம், அதாவது நாரையின் அலகு எதைப் போன்று உள்ளது என்று.
பலரும் பல பொருட்களைச் சொன்னார்களாம். சிலர் காய்ந்த குச்சியைப் போன்று உள்ளது என்றனர். சிலர் சர்பத் குடிக்கும் 'ஸ்டிரா' போன்று உள்ளது என்றனர் சிலர், வயதானவர்கள் பிடிக்கும் சுருட்டு போல உள்ளது என்றனராம்.

ஆனால் புலவர் பனங்கிழங்கு போன்று உள்ளது என்ற சரியான பொருளைச் சொல்லி பரிசை வாங்கிச் சென்றாராம்.

குமரன் (Kumaran) said...

மிக நல்ல எளிமையான பாடல்.

ENNAR said...

நன்றி ராபின் ஹுட்
ஓ அப்படியா அது எனக்குத் தெரியாதே நன்றி

ENNAR said...

நல்லது குமரன்

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

சிறு வயதில் மனனம் செய்த பாடல் மிக எளிமையாக அற்புதமாக உள்ளது. தந்ததற்கு மிகவும் நன்றி என்னார் ஐயா.

ENNAR said...

நன்றி குமரன்

ஓகை said...

அந்த சத்திமுற்றம் குடந்தைக்கு அருகில் பழைய சோழர் தலைநகரம் பழையாறைக்கு அருகில் இருக்கிறது. தாரசுரம் பட்டீஸ்வரம் வழியாகச் செல்லலாம்.

ENNAR said...

ஓகை
பரவாயில்லையே எல்லா ஊரும் தெளிவாக சொல்கிறீர்களே நாகைக்குப்பக்கத்தில் திருக்காழி என்ற ஊர் அப்பரம் திருமங்கை நாடு எங்குள்ளது தெரியுமா?

ஓகை said...

என்னார் எனக்குத் தெரியவில்லை. திருக்காழி கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது

வெற்றி said...

என்னார்,
நல்ல அருமையான பாடலையும், பாடல் எழுதப்பட்ட சூழ்நிலையையும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி. ஒரு சின்னக் கேள்வி:

//ஒரு நாரை தன் பெடையோடு வடக்கு நோக்கிப் பறந்து செல்லக் கண்டார்.//

பெடை என்பதன் பொருள் என்னவென தயவுசெய்து சொல்ல முடியுமா? நான் இச் சொல்லைக் கேள்விப்படவில்லை. கட்டாயம் பழந்தமிழ்ச் சொல்லாக இருக்குமென நினைக்கிறேன்.

ENNAR said...

ஓகை
மன்னிக்கவும் நான் கேட்கவந்தது
"நாகை மாவட்டம் திருவாலி திருநகரி என்ற தலம் 108 திருப்பதிகளுள் ஒன்று. இங்கு பெருமாள்,
திருமங்கையின் காதில் "ஓம் நமோ நாராயணா' எனும் மந்திரத்தை உபதேசித்து ஆட்கொண்டார். 108 திருப்பதிகளில் இங்கு மட்டும் தான் திருமங்கையாழ்வாருக்கு தனி மூலஸ்தானத்தில் திருமஞ்சன திருமேனியும், உற்சவ மூர்த்தியும் இருக்கிறது. இத்தலத்தில் திருமங்கையாழ்வார் தன்னைப்போலவே ஒரு சிலையை செய்து அதற்கு தன் சக்தி முழுவதையும் தந்து பெருமாளின் திருவடியை அடைந்தார். "

ENNAR said...

பெடை என்றால் பறவைகளின் பெண்பால்
அதாவது தனது துணைவியுடன் அந்த நாரை பறந்து சென்றது. பறவைகள் எங்கு சென்றாலும் ஜோடியாகத்தான் செல்லும் கல்காடை என்ற பறவை ஒன்றுள்ளது அதன் துணையிறந்து விட்டால் கல்லை நிறைய விழுங்கிவிட்டு மேலே பறக்கும் அங்கிருந்து சிறகை மூடிக்கொண்டு கீழே விழுந்து இறக்கும்.