முத்து எங்கு கிடைக்கம் கடலில் மட்டுமா? இல்லை மேக கூட்டத்திலுமா?,
இதோ வயல் காட்டில் விளையும் கரும்பிலும் முத்து கிட்டியதாம்!!!!!
மெய்யாலுமா? தெரிந்தவர்கள் கூறுமின்கள்
ஒருநாள் சடையவள்ளல் சோழனதவைக்களத்தே போந்து சிறக்கவீற்றிருந்தபோது, பெருங்குடி வணிகனொருவன், கடலிற்பட்ட அருவிலையுடைய பெருகொளிப்பருமுத்துகள் பலவற்றைக் கொணர்ந்து சோழன் திருமுன்னர் வைத்து, 'இவை முடியுடை வேந்தர்க்குத் தக்கன' என்று கூறாநிற்ப, அரசன் அவற்றைக் கண்டு மகிழ்ந்து புகழ்ந்தானாக, அதுகண்ட சடையவள்ளல் கழனிபடு வளத்தையே மேம்படுத்தேத்தி, அக்கழனிபடுமுத்தைக் போல இவை பெரியனவும் ஒள்ளியனவுமாகா' என்று சோழற்கு மாறுரைத்தனன்.
அதுகேட்ட சோழன் கழனியில் முத்துப்படுவது கேட்டறிவதன்றி யாம் கண்டறிவதில்லை என்ன, சடையவள்ளல் அது நுமக்கரிதாவதன்றி எமக்கன்று; நுமக்கு யான் அதுகாட்டுவேன் என்று, தமது கழனியிற் கமுகுபோலப் பருத்துவளர்ந்துள்ள கரும்புகளில் ஒரு சிலவற்றைக்கொணருவித்து, அவற்றுட் கோணிக் குறுகியதொரு கரும்பினை எடுத்து அதனொரு கண்ணை முறித்தனன். அதினின்று பல முத்துகள் தெறித்து வீழ்ந்து, அரசனது முடிமணியொளியினும் பேரொளி பரப்பின.
அப்போது சடையவள்ளல் தன் கழனிகளிலொன்றில் ஆயிரக்கணக்கான கரும்புகளில் ஒரு சிலவற்றானாயதொரு சிறுகட்டின்கணிருந்தவற்றில் ஒரு கோணற் சிறுகரும்பின் ஒரு கண்ணிலிருந்தன இவை என்றும், இங்ஙனமே தன்கழனிதோறும் உள்ளனவற்றையெண்ணிற் கணக்கிலவாமென்றும் அரசற்கு எடுத்துக் கூறினன். அதுகேட்டு, அரசவையிலிருந்த சான்றோரெல்லாம் 'சடையன் கழனிபடுவ கடல்படா' என்று புகழ்ந்தனர். கரும்பினின்று தெறித்த முத்துகளெல்லாம் ஒளியானும் பருமையானும், வணிகன் கொணர்ந்த கடல்படு முத்துகளையும் வென்று சிறத்தலை அரசன் கண்ணாரக்கண்டு, முகத்தான் வியந்து, அகத்தாற் சடையனது செல்வத்தில் அழுக்காறு கொண்டனன் என்ப.
http://www.tamilnation.org/literature/pmunicode/mp202.htm
20 comments:
இது வரை கேள்விப்படாத புதிய செய்தி.
முத்துக்கள் நிறைய உள்ளன. வலம்புரிஜான் ஒரு முறை தொலைகாட்சியில் சொன்னார்.
சற்றுப் பொறுங்கள், வருகிறேன்!!
நன்றி ஜெயஸ்ரீ
இதைத்தான் கேள்விப் பட்டேன்
"கரும்பினின்று தெறித்த முத்துகளெல்லாம் ஒளியானும் பருமையானும், வணிகன் கொணர்ந்த கடல்படு முத்துகளையும் வென்று சிறத்தலை அரசன் கண்ணாரக்கண்டு, முகத்தான் வியந்து, அகத்தாற் சடையனது செல்வத்தில் அழுக்காறு கொண்டனன் என்ப."
அழுக்காறு கொண்டனன்? சடையப்பவள்ளல் அன்று யார் முகத்தில் முழித்தாரோ, பாவம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐயா,
முத்துக்களில் பல வகை உண்டு. முத்துக்களின் பிறப்பிடமாக நமது இலக்கியங்களில் கூறப்படுபவை
1. முத்து சிப்பி
2. யானையின் தலை
3. மூங்கில்
4. கரும்பு
5. நாகப்பாம்பின் தலை
6. மேகம்
7. வராகம் (பன்றி)
8. சங்கு
9. மீன்
இவை முறையே சந்திர மணி, கஜ மணி, வேணு மணி, நாக மணி,விருக்ஷ மணி, மேக மணி, வராக மணி, சங்க மணி, மத்ஸ்ய மணி என்ற பெயர்களுடன் வழங்கப்படுகின்றன. இந்த முத்துக்களுக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்களும் உண்டு. பண்டைய இலக்கியங்களில் பல எடுத்துக்காட்டுகளும் உண்டு.
இது நல்ல கேள்விசார் இது
ஜெயஸ்ரீயின் பிழைதிருத்த பின்னூட்டம் நன்றி
நன்றி 'ஜெயஸ்ரீ'
நானும் இதன் சான்றைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்.
நான் படித்ததில், விருக்ஷமணிக்கு, மூங்கில் என்று போட்டிருந்தது.
'கணு' இருக்கும் தாவரம் எனவும் கொள்ளலாம், இல்லையா?
இதைப்பற்றிய குறிப்புகள் கருட புராணத்(!)திலும் அதர்வணவேதத்திலும் உள்ளன.
பர்த்ருஹரியின் சுபாஷிதானி (என நினைக்கிறேன்) யிலிருந்து
"மௌக்திகம் ந கஜே கஜே" - எல்லா யானைகளிடமும் முத்து இருப்பதில்லை. லட்சத்தில் ஒரு யானைக்கே அதன் தலையில் தந்தம் துவங்கும் இடத்தில் ஒரு வகை முத்து இருக்கும்.
சௌந்தர்யலஹரியிலும் " யானையின் தலையிலிருந்து பெறப்பட்ட முத்துக்களாலான மாலை அணிந்தவளே " என்று தேவி வர்ணிக்கப்படுகிறாள்.
நல்லாட்சி செய்யும் அரசனின் நாட்டில் விளையும் உயர்ந்த வகை மூங்கிலுக்குள்ளும், கரும்புக்குள்ளும் முத்துக்கள் இருக்கும் என்பது நம் கவிஞர்கள் காலம்காலமாகப் பயன்படுத்தும் குறிப்பு.
மூங்கில் அரிசி கேள்விப்பட்டிருக்கேன் மூங்கில் பூத்தால் அந்த மூங்கில் வேலைக்காகாது.
நீர்,[water] ஒரு குறிப்பிட்ட வகையில், காற்று புகா இடத்தில் பாதுகாக்கப்படும்போது, ஏற்படும் ஒரு ரஸாயன மாற்றமே முத்தாக உருவெடுக்கிறது என்னும் அடிப்படையில் பார்த்தால், இங்கு கூறிய அனைத்தும் சாத்தியமே!
எஸ்கே
பனித்துளி சிப்பியில் விழுந்து வந்தது முத்து என்பர் அப்படியா?
சிப்பிக்குள் இருப்பது caCO என்னும் ரசாயனப்பொருள். நல்ல நீர்(மழை நீர்) அதற்குள் விழும்போது உள்ளெ உள்ள பொருளின் துகள்கள் ஒட்டிகொள்ள் ஆரம்பிக்கின்றன. இந்த ரசாயன மாற்றத்தினால்தான் முத்து உன்டாகிறது.
செயற்கை முறையில் முத்துக்கள் தாயர் செய்கிறார்கள் அல்லவா?
//சடையப்பவள்ளல் அன்று யார் முகத்தில் முழித்தாரோ, பாவம்.
//
சடையப்ப வள்ளல் மூவேந்தர்களுக்கும் அவர்தம் படைகளுக்கும் விருந்தளித்து திரிகர்த்தராயன் என்ற பெயர் பெற்றார் என்றும், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பேருக்கு பாலும் சோறும் அளித்தார் என்றும், அவர் காலத்தில் ஈழத்தில் பஞ்சம் வர ஈழத்தரசன் வேண்ட ஆயிரம் கலங்களில் நெல் அனுப்பினாரென்றும் படித்திருக்கிறேன். அதனால் சடையப்ப வள்ளல் மேல் சோழன் பொறாமை கொண்டாலும் அவரை ஒன்றும் செய்ய அவனால் இயன்றிருக்காது என்று தான் எண்ணுகிறேன்.
ரஸாயனம் என்று வந்த பின்னர், செயற்கைமுறை தவிர்க்கப்பட முடியாத ஒன்றுதானே, 'என்னார்'!
'முத்துகள்', 'முத்துக்கள்'.
'உ'கரத்துக்குப் பின் 'க்' செராது என்பது விதி எனப் படித்திருக்கிறேன்.
நீங்கள் இந்தப் பதிவில் குறிப்பிட்ட 'சுட்டி'யில் கூட, 'முத்துகள்' என்றே ஆசிரியர் எல்லா இடங்களிலும் எழுதியிருக்கிறார் என்பதை கவனிக்கவும்
குமரன் இது எப்படியிருக்கிறது என்றால் ஆகா! என்னாமாய் ஜெயஸ்ரீயும், குமரனும் தெளிவாக நம்மைவிட விளக்கம் கொடுக்கிறார்கள் என நான் கொஞ்சம் பொறாமை கொள்கிறேன் அல்லவா அதுபோலத்தான் மன்னன்.
மாணவன் சகமாணவன் தன்னைவிட கொஞ்சம் கூட மதிப்பென் பெற்றவிட்டால் எப்படி அழுக்காறு கொள்கிறானோ அப்படி.
நன்றி sk இனி அவ்வாறே முத்துகள் என்றே எழுதுவோம் இல்லை டைப்புவோம்
Post a Comment