பொன்னார் மேனியனே! புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே!
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே !
அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே?
இந்த பாடலை பாடியவர் சுந்தமூர்த்திதான் ஏன் பாடினார் ?எதற்குப் படினார்?
"சுந்தரமூர்த்தி சுவாமிகள் சோழ நாட்டு ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து கொண்டிருந்தபோது ஒரு நதியைக் கடக்க வேண்டியதாயிருந்தது. நதியைத் தாண்டி அப்பால் செல்லத் தொடங்கினார். அப்போது, 'சுந்தரம்! என்னை மறந்தாயோ!' என்று ஒரு குரல் கேட்டது.
சுந்தரமூர்த்தி திடுக்கிட்டார் அது தம்மை ஆட்கொண்ட இறைவனுடைய குரல் என்பதை உணர்ந்தார். பக்கத்தில் இருந்த சீடர்களைப் பார்த்து "இங்கே சமீபத்தில் எங்கேயாவது சிவன் கோயில் இருக்கிறதா?" என்று கேட்டார்.
"ஆம், சுவாமி! அந்தக் கொன்னை மரங்களின் மறைவில் மழபாடி கிராமத்துச் சிவன் கோயில் இருக்கிறது!" என்று சீடர்கள் சொன்னார்கள்.
உடனே சுந்தரமூர்த்தி அங்கே சென்றார்; பூத்துக் குலுங்கிய கொன்னை மரங்களின் மறைவில் ஒரு சிறிய கோவில் இருந்தது. சுந்தரமூர்த்தி அங்கே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மனமுருகிப் பாடினார். அன்றொரு நாள் தன்னைத் தடுத்தாட்கொண்டது போல், இன்றைக்குத் தன்னைக் கூப்பிட்டு அருள்புரிந்த கருணைத் திறனை வியந்தார்.
'சுவாமி! தங்களை நான் மறந்து விடுவேனா? என்ன கேள்வி கேட்டீர்கள்? தங்களை மறந்துவிட்டு வேறு யாரை நினைப்பேன்?' என்னும் கருத்து அமைத்து,
மேற்கண்ட பாடலைப் படினார்.
பொன்னியின் செல்வன்
17 comments:
அன்பு என்னார்,
திருமழபாடி தானே?
ஆமாம். என்ன நீண்ட நாட்களாக காணவில்லை போல் உள்ளது?
நானும் இந்த நிகழ்வைப் பற்றிப் படித்திருக்கிறேன் ஐயா. பொன்னியில் செல்வனில் இருந்து எடுத்து இட்டதாக நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள். அதிலும் படித்ததாக நினைவு. :-)
அருமையான விளக்கத்துடன் பாடலை விளக்கி உள்ளீர்!
வாருங்கள் சுதாகர் நன்றி
படித்தேன் பின் மறந்தேன் இன்று படித்தேன் மற்றவர்களுக்கும் அளித்தேன் பொன்னியின் செல்வனிலிருந்து
அருமையான பாடல் இது என்னார் ஐயா.அளித்தமைக்கு நன்றி
செல்வன் நன்றி
கொன்றைமரம் இலை அகத்திஇலை போல் இருக்கும் ஆடு மாடுகள் தின்றாது, பூ சிகப்பாக கொத்து கொத்தாக இருக்கும் காய் நீண்டு கருப்பாக இருக்கும் முருங்கைகாய் போல் இருக்கும் .
தங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி
கொன்னை என்பது வழக்குச் சொல் அதையே ஆசிரியர் கையாண்டுள்ளார்கள்.
அதன் பூ மஞ்சலும் சற்ற சிகப்பும் கலந்திருக்கும் தாங்கள் சொன்ன அதே மரம்தான்.
பொன்னியின் செல்வனிலிருந்து ஓர் அருமையான பகுதியை பதிவு செய்திருக்கிறீர்கள். கதையின் மிகவும் உணர்ச்சிமயமான கட்டத்தில் இந்த சம்பவத்தை விவரித்திருப்பார். பொன்னியின் செல்வனில் இது போன்ற பல செய்யுட்களை கதையில் கல்கி சேர்த்திருக்கிறார். கோடிக்கரை குழகரைப் பற்றி ஒரு பாடல் வரும்.
ஓகை
என்ன பாடல் அது இன்னமும் நான் அதைப் படிக்கவில்லை
அன்பு நண்பர் பார்வை பிழைபொருத்தருளவேண்டும் தவறுதான் சரிசெய்து விட்டேன்
நன்றி
அருமையான பாடல். அழகான விளக்கம்.
நன்றி மணியன்
என்னார், மிகத் தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
கோடியக்கரை குழகரைப் பற்றி சுந்தரமூர்த்தி சுவாமிகள் பாடியதை கல்கி பொன்னியின் செலவன் இரண்டாம் பாகத்தில் பூங்குழலியை அறிமுகப் படுத்தும்போது விவரிக்கிறார்.
தனியாய் காட்டுக்கு நடுவில் கோவில் கொண்டிருந்த குழகேசரைக் கண்டு மனமுருகிப் பாடும் இரண்டு பாடல்கள்:
கடிதாய் கடற்காற்று வந்தெற்ற கரைமேல்
குடிதான்அயலே இருந்தால் குற்றமாமோ?
கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள் உமக்கார் துணையாக இருந்தீரே?
மத்தம் மலிசூழ் மறைக்கடதன் றென்பால்
பத்தர் பலர் பாடவிருந்த பரமா!
கொத்தார் பொழில் சூழ்தருகோடிக் குழகா
எத்தாற் றனியே யிருந்தாய்? எம்பிரானே!
மேலும் மூன்றாவது பாகத்தில் சுந்தரரின் மற்றுமொரு பாடல்:
காடேன் மிகவால் இது காரிகை யஞ்சக்
கூடிப் பொந்தில் ஆந்தைகள் கூகை குழற
வேடித் தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
கோடிக் குழகா விடங்கோயில் கொண்டாயே!
இப்பாடல்களுக்கு முழுதாய் எனக்கு பொருள் விளங்கவில்லை.
நீங்கள் விளக்கினால் நலம்.
நண்பர் ஒகை
முதல் பாகம் முடிக்க இன்ன இரண்டு பக்கங்கள் உள்ள நிலையில் வேறு வேலையிருந்ததால் படிக்க முடியவில்லை பிறகு இரண்டாம் பாகம் புத்தகம் என்னிடம் இல்லை தலத்தில் தான் படிக்கலாம் என உள்ளேன் மான் சேற்றில் விழுந்தவரை படித்தேன் பிறகு முழுவதும் படித்து எனக்குத் தெரிந்தவரை எழுதுகிறேன்
நன்றி
Post a Comment