Friday, May 12, 2006

என் ஐயம் தெளிவிப் பாருண்டோ - 6 -

இந்த கணக்கு சரியாக இருக்குமா? எனக்குச் சொல்லுங்கள்

ராமர் பிறந்த தினம்
டாக்டர் பி.வி.வர்த்தக் என்பவரின் ஜோதிட கணக்கின்படி கி.மு.7323, டிசம்பர் 4ம் தேதி செவ்வாய் கிழமையன்று ராமபிரான் பிறந்ததாக கூறுகிறார். கி.மு.7306, நவம்பர் 29ம் தேதி வியாழக்கிழமை ராமர் காடு சென்றார். அவர் காடுசென்ற 6ம்நாள் புதன்கிழமை (டிசம்பர் 5ம் தேதி) தசரதர் இறந்தார். கி.மு.7292, நவம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ராவணன் இறந்தான். கி.மு.7292 டிசம்பர் 5ம் தேதி சனிக்கிழமையன்று ராமன் அயோத்தி வந்தார். இந்த கணக்கின்படி ராமன் 110 ஆண்டுகள் வாழ்ந்திருக்க வேண்டும் என வர்த்தக் கூறுகிறார்.

10 comments:

குமரன் (Kumaran) said...

இந்தக் கணக்கில் என்ன ஐயம் என்று சொல்லவில்லையே என்னார் ஐயா? இராமன் 110 ஆண்டுகள் வாழ்ந்தாரா; அது இயலுமா என்று கேட்கிறீர்களா? வரலாற்று நோக்கில் அண்மையாகக் கருதப்படும் இராமானுஜர் 120 ஆண்டுகளோ என்னவோ வாழ்ந்ததாக பல வைணவ நூல்கள் கூறுகின்றனவே. தற்காலத்திலும் 100 வயதிற்கு மேல் வாழ்ந்த, வாழும் மக்கள் இருக்கிறார்களே.

உங்கள் ஐயம் வேறு ஏதாவதா?

ENNAR said...

அந்த வயதில் இப்பொழுது வாழ முடியும் அவரது தந்தை நீ...ண்ட நாட்கள் வாழ்ந்ததாகக் கேள்விப் பட்டோம்
அடுத்து இந்த கணக்கு சரிதான ஒருவர் சொன்னதை போட்டுள்ளேன் (இணைய தலத்தில் தான்)

விட்டுது சிகப்பு said...

என்னார் சாரு. குமரன் டீச்சரு சொன்னா சரியாத் தான் இருக்கும். என்னா சொல்றீக?

ENNAR said...

ஆமாம் சரின்னு சொல்கிறேன்

Maayaa said...

hi
first time here..unga posts and links are really nice!!

ENNAR said...

welcome Priya Thanks for your comment

Sivamurugan said...

என்னார் சார்,
டிசம்பர் மாதம் பிறந்தார் எம்பது தவறு இது என்னுடைய கருத்து,

புத்திர காமேஷ்டியாகம் நடந்து, யாக பலனாக தன்வந்திரி பகவன் தோன்றி பாயாசம் தர 10வது மாதம் நவமி திதியில் இராமர் தோன்றினார். இராமர் பிறந்தது பங்குனிமாதம் அதாவது ஆங்கில மாத சுற்றுப்படி பிப்ரவரி. எனில் பிப்ரவரி மாதம் தான் வரவேண்டும்.

//அந்த வயதில் இப்பொழுது வாழ முடியும் அவரது தந்தை நீ...ண்ட நாட்கள் வாழ்ந்ததாகக் கேள்விப் பட்டோம்
அடுத்து இந்த கணக்கு சரிதான ஒருவர் சொன்னதை போட்டுள்ளேன் (இணைய தலத்தில் தான்) //

அவதாரநோக்கம் முடிந்தவுடன் அவதாரத்தை முடித்துக்கொண்டார்.

ENNAR said...

சிவா
அவதார நோக்கம் முடிந்தது என்றால் இராவணனை வதம் செய்ததும் அந்நோக்கம் முடிந்து விட்டதல்லவா? பிறகு ஏன் தன்மகனிடம் சண்டைக்குச் செல்கிறார்.

Sivamurugan said...

//சிவா
அவதார நோக்கம் முடிந்தது என்றால் இராவணனை வதம் செய்ததும் அந்நோக்கம் முடிந்து விட்டதல்லவா? பிறகு ஏன் தன்மகனிடம் சண்டைக்குச் செல்கிறார்.//

என்னார் ஐயா,

அரசன் இல்லாமல் நாடு திண்டாட கூடாது அல்லவா? அகவே ஒரு வீர அரசனை தந்து விட்டு அவதாரத்தை முடித்து கொண்டனர்.

ENNAR said...

நன்றி சிவா