Thursday, February 16, 2006

ஆங்கிலோ இந்தியர்

ஜெர்மன் நாஸி சிறையில் வாடிய ஆங்கிலோ இந்தியர்


திருச்சிராப்பள்ளி மத்திய சிறைச்சாலையில் ஜெயிலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் இ.எம்.ஜேம்ஸ் என்ற ஆங்கிலோ இந்தியர். இவர் 1941இல் திருச்சிராப்பள்ளியில் இருந்த பிரிட்டீஸ் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றி பின் வட ஆப்பிரிக்காவிலும், கெய்ரோவிலும் ராணுவ சார்ஜென்டாகப் பணியாற்றியுள்ளார். இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியபோது இவர் டிரைபோலி (Tripoli) என்னும் ஊரில் 3000 ராணுவ வீரர்களுடன் ஜெர்மன் நாஸிப் படையால் கைது செய்யப்பட்டு இத்தாலியில் சிறை வைக்கப்பட்டார். இவருடன் நாராயணசாமி, ஹென்றி என்ற தமிழர்களும் உடன் கைது செய்யப்பட்டிருந்தார்கள்.

இத்தாலியிலிருந்து பிரான்ஸுக்குக் கொண்டு செல்லும் வழியில் இம்மூவரும் நாஸிப் படைகயில் இருந்து தப்பி ஓடி, 15 நாட்கள் இரவு பகலாக அலைந்து மீண்டும் ஜெர்மன் படையிடம் சிக்கிக் கொண்டனர். ஐந்து நாட்கள் பண்டங்கள் ஏற்றும் கூட்ஸ் ரயில் பெட்டிகளில் அடைக்கப்பட்டு ஜெர்மனுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். அங்கு நாஸி ராணுவ ஜெயிலில் கடுமையான வேலைகள் தரப்பட்டு பல கொடுமைகளுக்கு ஆளாயினர். மீண்டும் ஒரு நாள் அங்கிருந்து தப்பி ஓடிப் பல மைல்கள் கடந்து ஒரு ஏழை விவசாயி பராமரிப்பில் பதுங்கியிருந்தனர். ஆனால் விதி வசத்தால் ஒரு ஜெர்மானியப்படையிடம் சிக்கி மீண்டும் ஜெர்மன் ராணுவ முகாமில் அடைக்கப்பட்டுக் கொடுமைப்படுத்தப்பட்டனர். 1943 ஜுன் 12 ந்தேதி அமெரிக்க ராணுவம் டாம்பெயர்(Dampaire) என்ற இடத்தில் குண்டுகள் வீசி ஜெர்மனியப் படைகளை ஓடச் செய்தனர். பின் அமெரிழக்கப் படைத்தளபதியின் உதவியால் லண்டனுக்கு அனுப்பப்பட்டு அங்கு மூன்று மாதம் சிகிச்சை பெற்று 1944 டிசம்பர் மாதம் பம்பாய்க்கு ஜேம்ஸ் அனுப்பப்பட்டார்.

ஜேம்ஸ் பிரிட்டீஸ் இராணுவப் படையில் இருந்து ஜெர்மனியில் சிறைபட்டிருந்த வேளையில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அங்கு ஜேம்ஸ் உட்பட்ட இந்திய ராணுவ வீரர்களை அழைத்துப் பேசியுள்ளார். இன்று 90 வயதைக் கடந்துள்ள இ.எம்.ஜேம்ஸ் காது கேளாத நிலையில் இருந்து சென்ற ஆண்டு இறந்து விட்டார் அவரது குடும்பத்தை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்.

திருச்சி பொன்மலையில் இருப்பதாக கேள்வி.


4 comments:

நல்லவன் said...

அவர் குடும்பத்தை பற்றி தெரியபடுத்துங்கள்

ENNAR said...

விராசணையில் உள்ளேன் பிறகு பதிக்கிறேன்

பழூர் கார்த்தி said...

நன்றாக எழுதியிருக்கிறீர்கள் என்னார், பாராட்டுகள் !! திருச்சிராப்பள்ளியை பற்றிய பதிவுகள் அருமை !! திருச்சி வரலாற்றை எழுதும்போது, நிகழ்காலத்தையும் (தற்கால திருச்சியையும்) அவ்வப்போது ஒப்பிட்டால் இன்னும் சுவாரசியமாக இருக்குமென கருதுகிறேன்.. சில நாட்கள் முன்பு நானும் 'நம்ம ஊர் திருச்சி' என்று ஓர் பதிவிட்டேன்.. நேரமிருப்பின் பாருங்கள் !!

ENNAR said...

T களத்தூர் எப்படி இருக்கிறது
நன்றி நான் ஏற்கனவே பார்த்து ஒரு முறை பின்னூட்டம் இட்டுள்ளேன் மறுபடியும் பார்க்கிறேன்.