Wednesday, February 08, 2006

திருச்சிராப்பள்ளி - 4 -

'விஸ்வநாத நாயக்கரால்' மதுரை நாயக்க அரசு தோற்றுவிக்கப்பட்டபொழுது திருச்சிராப்பள்ளிப் பகுதி இவ்வரசின் கோட்டையைப் புதுப்பித்துப் பலப்படுத்தியது மட்டுமல்லாமல், தெப்பக்குளத்தைவெட்டியவரும் அவரே! நாகக்கர் ஆட்சிக் காலத்தழில் இந்நகர் பெரிழதும் மவளர்ச்சியடைந்தது. அதேபோல் இவர்களின் ஆட்சிக்காலத்தில் மதுரையும், திருச்சிராப்பள்ளியும் மாறி மாறித் தலைநகராக விளங்கின.

விசுவநாத நாயக்கருக்குப் பின் வந்த முத்துவீரப்ப நாயக்கர் கி.பி.1616 இல் தம் தலைநகரை மதுரையிலிருந்து திருச்சிராப்பள்ளிக்கு மாற்றினார். விஜய நகர மன்னர் 'இரண்டாம் வெங்கடன்' இறந்த பின் வாரிசுப்போட்டியில் யச்சம நாயக்கருக்கும், ஜக்கராயருக்கும் கி.பி.1616 இல் தலைநகரை மீண்டும் திருச்சிராப்பள்ளிக்கே மாற்றி இங்கே ஒரு மாளிகை கட்டி நகரை அழகுபடுத்தினார்.

சொக்கநாத நாயக்கர் ஆட்சிக்காலம் முதல், நாயக்க அரசு முடிவுற்ற காலம் வரை (கி.பி.1736) தருச்சிராப்பள்ளியே மதுரை நாயக்க அரசின் தலைநகராக இருந்தது. நாயக்கர் மரபில் குறிப்பிடத் தக்க அரசியார் இராணி மங்கம்மாள் ஆவார். ஸ்ரீரங்கம் காவிரிப் படித்துறையிலுள்ள அம்மாண்டபம் இந்த அரசியால் கட்டப்பட்டதே ! ஸ்ரீரங்கம் ராயகோபரத்திலிருந்து அம்மா மண்டபம் செல்லும் சாலை அம்மா மண்டபம் சாலை என்று இவர் பெயரலேயே இன்றும் விளங்குகிறது. டவுன்ஹால் கட்டிடங்களும் இவர் கட்டியவைகளேயாகும். தற்பொழுது வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், வட்ட வழங்க அலுவலகம், அருங்காட்சியகம், லோக்கல் பண்ட் ஆய்வலுவலகம் ,காவல் நிலையம், ஆவண பதிவலுவலகம், மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் உள்ளன.

நாயக்கர் ஆட்சிக்குப் பின் திருச்சிராப்பள்ளி ஆற்காட்டு நவாப்பின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. இதற்குப்பின் கி.பி.1741 முதல் 1743 வரை மராட்டியரின் ஆட்சியில் மராட்டிய அரசின் பிரதிநியாக 'முராரிராவ்' என்பவர் ஆளுநராகத் திருச்சிராப்பள்ளிக்கு நியமிக்கப்பட்டார்.

கி.பி.1743 இல் ஹைதராபாத் நிஜாம் 'அசப்ஷா' எண்பதினாயிரம் குதிரைப் படையும், இரண்டு லட்சம் காலாட் படையும் கொண்டு தென்னிந்தியாவின் மேல் படையெடுத்து வந்து, திருச்சிராப்பள்ளியை முற்றுகையிட்டபொழுது புதுக்கோட்டை மீதும் படையெடுக்க உத்தேசித்திருந்தான். அதனையறிந்த கூனப்பட்டி , துழாய்குடி மற்றும் சில ஊர்களின் தலைவர்கள் அவனுடைய குதிரை முதலியவற்றைக் கொள்ளையடித்தனர் அவர்களைத் தண்டிக்கமாறு நைசாமால் அனுப்பப்பட்ட படைத்தலைவன் அவர்களிடத்தில் ஒன்றும் செய்ய முடியாமல் சமாதானமாய் திரும்பினான்.

இவர் கிரதிநிதியாக இருந்த 'குவாஜா அப்துல்லா' 1744 இல் இறந்தார். இவருக்குப் பின் ஆற்காட்டு நவாப் 'அன்வாரூதீன்' பொருப்பேற்றார். இவர் கோட்டையைப் புதுப்பித்துக் கட்டினார்.

கி.பி. 1749 இல் அன்பாரூதீன் இறந்த பின் நவாப்பின் பதவிக்கு அவர் மகன் முகமதலிக்கும், சந்தாசாகிப் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. இப்பதவிப்போட்டிக் காலத்டதில் டகர்நாடகப்போர்கள் நடநட்தன. இதனால் திழருச்சிராப்பள்ளி பல தாக்குதல்களுக்கு உள்ளானது.

போர் நடந்த காலங்களில், திருச்சிராப்பள்ளி மலைக்கோயிலும், குகைக்கோயில்களும், வெடி மருந்துக்கிடங்குகளாக உபயோகிக்கப் பட்டன. கர்நாடக நவாப்பான முகமது அலி, இறந்த பின், அவரின் உறவுக்காரரும் வாரிழசுதாரருமான 'அஸில்-உல்-தெளலா' என்பவரும் ஆங்கிலேயர்களும் 30-07-1801 இல் ஒரு உடன்படிக்கை செய்து கொண்டனர். அதனட்படி நவாப் ஆங்கிலேயரிடமிருந்து பென்ஷன் பெற்றுக் கெணர்டனர்.

ஆங்கிலேயர்கள் வசம் வந்த பகுதியில் திருச்சிராப்பள்ளியும் சேர்ந்திருந்தது. திருச்சிராப்பள்ளி ஆங்கிலேயர் கைக்கு வந்ததும். அதை நிர்வகிக்க ஒரு ஆங்கிலக் கலெக்டர் நியமிக்கப்பட்டார். அவர் தான் திருச்சிராப்பள்ளியின் முதல் கலெக்டர் 1801 ல் ஜான்வாலேஸ் (J. Wallace) ஆவார். இதன்பின் ன1947 ஆகஸ்டு 15 வரை ஆங்கிலேய கலெக்டர்கள் பிரிட்டிஷ் அரசின் பிரதிநிதியாக இம்மாவட்டத்தை நிர்வாகம் செய்தனர்.

ஆங்கிலேயர் படைகொண்டு பல இந்திய பகுதிகளை பிடித்து தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வில்லையென்றால் இன்று நாடு சிறு சிறு துண்டுகாளக பிளவுபட்டு போயிருக்கும் மேலும் அன்று முஸ்லீம் மன்னர்கள் ஆதிக்கம் அதிகமாக இருந்ததால் அதிகமானவர்கள் மூஸ்லீம் மதம் மாறியிருக்குவும் கூடும்.


தொடரும் . . . . . . . . . .

ஆதாரம் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கள்ளர் சரித்திரம்

நடந்தாய் வாழி

2 comments:

ENNAR said...

nil

நல்லவன் said...

நன்று