வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருச்சிராப்பள்ளிக் கோட்டை நாயக்க மன்னர்கள், ஆற்காட்டு நவாப் முதலியோர் காலத்டதில் கட்டப்பட்டும், பிற்காலத்தில் பலரால் பாதுகாக்கப்பட்டும் வந்துள்ளது.
விஸ்வநாதர் காலத்தில் செப்பனிடப்பட்ட இக்கோட்டை,1616 இல் முத்துவீரப்பர் தமது தலைநகரைத் திருச்சிராப்பள்ளிக்கு மாற்றியபோது கோட்டை மேலும் பலப்படுத்தப்பட்டிருக்கிறது.
1659-1682 இல் ஆட்சி செய்த சொக்கநாதர் தனது ஆட்சியின் தொடக்கக் காலத்தில் லிங்கம் நாயக்கர், செஞ்சியின் ஹாஜி உதவியுடன் திருச்சிராப்பள்ளிகோட்டையை முற்றுகையிட்டார். ஆனால் சொக்கநாதர் இம் முற்றுகையிலிருந்து திருச்சிராப்பள்ளியைக் காப்பாற்றினார்.
கி.பி. 1665 இல் திருச்சிராப்பள்ளிக் கோட்டை மைசூர் படைகளால் முற்றுகையிடப் பட்டது. அதேபோல் 1665 முதல் 1736 முடிய திருச்சிராப்பள்ளி மதுரை நாயக்க அரசின் தலைநகரமாக இருந்திருக்கிறது.
கி.பி.1733இல் பங்காரு நாயக்கர் அரசி மீனாட்சியைப் பதவியிலிருந்து நீக்க விரும்பி நகரைத் தாக்கினார். ஆனால் அரசி மீனாட்சியின் படைகள் நகரைப் பகைவரின் தாக்குதலிலிருந்து காத்தன. பங்காரு நாயக்கர் மறுபடியும் கோட்டையைத் தாக்கிய பொழுது, தென்னாட்டில் படையெடுப்பிலிருந்து ஆற்காட்டின் தளபதி சந்தாசாகிப்பின் உதவியை ராணி மீனாட்சி பெற்றார், ஆனால் சந்தாசாகிப் அரசி மீனாட்சியைக் காவலில் வைத்துவிட்டுத் கோட்டையைத் தனதாக்கிக் கொண்டார்.
கி.பி. 1741 இல் மராட்டியர்கள் கோட்டையை முற்றுகையிட்டு வென்றனர். ஆனால் கி.பி. 1743இல் ஹைதராபாத் நிஜாம் அசப்ஹ கோட்டையை முற்றுகையிட்டு, மராட்டியரிடம் இருந்து அதனைக கைப்பற்றினார்.
ஆற்காடு நவாப் அன்வாருதீன் கோட்டையைப் புதுப்பித்துக் கட்டினார். இவர் இறந்தபின் ஆற்காடு நவாப்பின் பதவிக்குப் போட்டி ஏற்பட்டபோது, நவாப்பின் மகன் முகமதலி தனது பாதுகாப்பிற்காக கோட்டைக்குள் புகுந்தார். இதனால் சந்தா சாகிப்பின் படைகள் 1751இல் திருச்சிராப்பள்ளிக் கோட்டையை முற்றுகையிட்டன.
ஆனால் முகமதலி ஆங்கிலேயரின் உதவியை பெற்றார். பகைவர்களால் எளிதில் காக்க முடியாதபடி கோட்டை பலம் மிக்கதாய் இருந்தது. கடைசியில் சந்தாசாகிப் தோலிவியுற்றுக் கொல்லப்பட்டார். 1752இல் திருச்சிராப்பள்ளிக் கோட்டை தாக்கப்பட்டது.
நாயக்க மன்னர்களின் வீழ்ச்சிக்குப் பின் கோட்டைச் சுவர்கள் நாளடைவில் நலிவடைய ஆரம்பித்தன. ஆங்காங்குக் கற்கள் பெயர்ந்தும், சிரிலமடைந்தும், மரம், செடி, கொடிகள்ட வளர்ந்தும் இடிந்தும் போயின. அகழிகள், நீர் போக்குவரத்தின்மையாலும், தூர்ந்து போயின.
ஆதாரம் நடந்தாய் வாழி
தொடரும்...........
4 comments:
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்கிறேன்!!!
நன்றி
விரைவில் பதிக்கிறேன்
சந்தாசாகிப் என்பவர் முஸலீம் மன்னரா
THANKS
Post a Comment