Tuesday, February 07, 2006

திருச்சிராப்பள்ளி - 2 -



சிரா என்ற சமண முனிவர் இங்கு வாழ்ந்து வந்ததால் அவர்கள் இருக்கும் இடம் பள்ளி என்பதாலும் சிராப்பள்ளியாகிற்று அதற்கு அடை மொழியாகா திரு வைச் சோர்த்து திருசிராப்பள்ளி என பெயர் வந்ததாக வரலாறு கூறகின்றது.

அந்த மலையின் மேல் எழுந்தருளியிருக்கும் சிவன் தாயும்மானவர் என வழங்கப்படுகிறது. அதற்கு காரணம் ஒரு செட்டியார் குளத்துப் பெண் கருவுற்றிருந்தாள் . அப்பொழுது அவளது தாயார் மகளைக் காண காவிரி யாற்றைத் தாண்டி வரவேண்டும் மகளின் பேருகாளத்தில் வந்த நேரத்தில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அத்தாயாரால் வர இயலவில்லை எனவே அத்தாய் ,'மலைமேலிரு்கும் இறைவா எனது மகளை நீ தான் காக்கவேண்டும் ' என சொல்லிவிட்டு சென்று விட்டாள்.

சில நாட்கள் கழித்து வெள்ளம் வடிந்த பின் வந்த தாய்," அம்மா என்ன குழந்தை பெற்றாய் நான் இல்லாமல் போனேனே நல்லபடியாக இருக்கின்றாய என பேரக்குழந்த எப்படி இருக்கிறது" என ஆவலுடம் குசலம் விசாரிக்க . மகள், ' அம்மா நீ அப்போவே வந்து எனக்கு எல்லா வேலைகளையும் செய்து கொடுத்தாயே புதுசா என்ன கேக்ற ' என கேட்கவும் தாயாருக்கு ஒன்றும் தெரியாமல் மேலே பார்க்கும் போது சிவன் அங்கே காட்சி கொடுத்து உனக்காக நான் உன் வேலையைப் பார்த்தேன் என கூறிமறைந்தார். அதானல் தான் தாயும் ஆனார் என பெயர் வந்தது.

2 comments:

குமரன் (Kumaran) said...

சிராப்பள்ளி பெயர்க்காரணம் இன்று தான் தெரிந்து கொண்டேன். நன்றி ஐயா. சிராப்பள்ளி மலையில் சமணக் குகைகள் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன். உண்மையா ஐயா?

ENNAR said...

//சிராப்பள்ளி மலையில் சமணக் குகைகள் இருக்கின்றன என்று படித்திருக்கிறேன். உண்மையா ஐயா?//
உண்மை தான் இருக்கிறது நன்றி குமரன்