
வெக்காளியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டு விழா அழைப்பிதழ் - திருச்சிராப்பள்ளி உறையூர்
நாள்: 17-03-2006 வெள்ளிக்கிழமை
உலகெலாம் உய்யவந்த உயர்சண்டி காளியவள்,
நிலவெய்யில் நீர் காற்று நிலையாக வளம்பெறவே,
குலமக்கள் குடியோங்க குவலயமும் தழைத்திருக்க,
தலம் கொண்டிவ் உறையுரின் தாய்தேவி வெக்காளியே!
மெய்யன்புடையீர்,
"ஊர் எனப்படுவது உறையூராம்" என்ற பண்டைத் தமிழர்களின் வரலாற்றுக்கு ஆதாரமான "தொல்காப்பியம்" என்ற நூலின் மூலம், கி.மு.300க்கும் முற்பட்ட, முற்காலச் சோழர்களின் தலைநகரமாக விறங்கியது என்ற பெருமை படைத்த பழமையான நகராக விளங்கித் தற்காலம் திருச்சிராப்பள்ளி மாநகரின் ஒரு பகுதியாக விளங்குகின்ற பெருமைக்குரிய நகர் உறையூர் நகர்.
இவ் உறையூர் நகரின் வடதிசையில், முற்காலச் சோழர்களின் மரபில் வந்த சோழன் பெருநற்கிள்ளியால் இன்றைக்கு ஈராயிரமாண்டுகளுக்கு முன்னர், "பத்தினிக் கோட்டம்" சமைத்து நித்தமும், வழிபாடுகள் செய்து வந்தான் என்ற செய்தியானது, சிலப்பதிகாரக் காவியத்தின், உரைபெறு கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளதின் மூலம் அறியப்படுகிறது. இப்பத்தினிக்கோட்ட வழிபாடே, நாளடைவில், கொற்றவை வழிபாடாகவும், பின்னர், நகரின் காவல் தெய்வமாகி " வெக்காளி வழிபாடாக" மாறி இன்றளவும், தன்னை நாடி வரும், அன்பர்களுக்கு "வினைக்கோள் பயம் நீக்கி, வேண்டும் வரம் அருளும் வெக்காளித் தாயாக" அமர்ந்து அருள் வழங்கி வருகின்றாள்.
பாலில் படுநெய் போலும், விறகிற் தீ போலவும், உட்கடந்திருக்கும் சக்தியை கலியுகத்தில், உருவடிவில், கண்கண்ட தெய்வமாக நாம் காலத்தை வழி நடத்தும் காளியாக நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர். யாதும் ஆகி நின்றாய் காளி! எங்கும் நீ நிறைந்திருந்தாய் என்றபடி பல இடங்களில் கோயில் கொண்டுள்ள அன்னையானவள் வெட்கை, மழை, பனி, காற்று முதிலயவற்றிலிருந்து நம்மைக் காக்க வெட்ட வெளியில் அமர்ந்து உலகைக் காத்து அருளாட்சி செய்கிறாள் அன்னை வெக்காளியாக.
இத்தகைய பழமைச் சிறப்புடன் நல்லருள் கூட்டி நம்மையெல்லாம் காத்தருளுகின்ற " அன்னை வெக்காளியின்" உறைவிடமாம், இத்திருக்கோயிலில் அருட் கொடையாளர்களின் பேருதவியால் புதியதாக மூன்று நிலை இராஜகோபுரம் திறந்த வெளிகளாகவிருந்த திருக்கோயிலின் நாற்புறங்களிலும் பக்தர்களின் வழிபாட்டு நலனுக்காக மண்டபங்கள் விரிவு படுத்தப்பட்டும் கருங்கல்லால் கருவறை திருப்பணி மற்றும் பல்வேறு திருப்பணிகள் முடிக்கப்ட்டு நாளது திருவள்ளுவராண்டு 2037 பங்குனித் திஙகள் மூன்றாம் நாள் (17-03-06) வெள்ளிக்கிழமை துவிதி திதி சித்திரை உடு சித்தயோகம் கூடிய இனிய நற்பொழுதில் காலை 7.30 மணியிலிருந்து 8.10 மணிக்குள் மீன லக்கனத்தில் திருக்குடநன்னீராட்டு விழா மிகச் சிறப்புடன்ட நடை பெறவுள்ளது.
அன்னை வலை தளம்
மின் அஞ்சல் :vekkaliamman@sancharnet.in
5 comments:
வெக்காளியம்மன் கோவில் வெளிக்கோபுரம் கட்டியாச்சா? விவர்ம் தெரிவித்தமக்கு நல்லது, திரு என்னார் அவர்களே!
நன்றி வெளிகண்ட நாதர்
சென்ற 25-11-05 ல் ஏற்பட்ட மழைவெள்ளத்தில் அன்னையில் கழுத்தளவிற்கு தண்ணீர் புகுந்து விட்டது அதனால் பீடத்தையும் உயர்த்தி கருங்கல் கொண்டு கட்டி விட்டார்கள்.
குடமுழுக்கு விழா காண அனைவரும் வருவ வருக
நன்றி சிவா
குடமுழுக்கு விழாவைப்பற்றி அறியத்தந்து தகவல்கள் வழங்கிய என்னார் அய்யாவுக்கு நன்றி.
தொலைதூரமாக இருப்பதனால் இங்கிருந்தே பிரார்த்தனை செய்கிறோம் அய்யா.
நன்றி மூர்த்தி
Post a Comment