Friday, March 31, 2006

திருச்சிராப்பள்ளி

உறையூரைச் சேர்ந்த சோழன் கிள்ளியின் போர் யானை, அபூர்வமான ஒன்று.

அதிகாலையில் உறையூரிலிருந்து கிளம்பிய அந்த யானை, முதலில் காஞ்சி நகருக்குச் சென்றது, அதை ஒரு காலால் மிதித்தது. (அதாவது, அந்த நாடு சோழனுக்கு உரிமையானது !)

அடுத்ததாக, நீர் அலைகள் தத்திக் குதிக்கும், குளிர்ச்சியான உஜ்ஜயினி நகருக்குச் சென்று, அதை இன்னொரு காலால் மிதித்தது.

அதன்பின்னர், கடலைக் கடந்து, இலங்கை - ஈழத்தையும் ஒரு காலால் மிதித்தது.

இப்படியாக, எல்லா நாடுகளையும் தன் காலால் மிதித்து, வெற்றி கண்டபின், உறையூர் நகருக்குத் திரும்பியது அந்த யானை !

அந்தக் காலத்தில் அரசர்கள் வெவ்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்நாட்டு மன்னர்களுடன் போரிட்டு, வென்று, தங்களின் ராஜாங்கத்தை விரிவுபடுத்திக்கொள்வார்கள் - சோழன் கிள்ளி, காஞ்சி, உஜ்ஜயினி, இலங்கை ஆகிய பகுதிகளை வென்றவன். அந்தச் செய்தியை, இந்தப் பாடல் சோழனின் யானையைக் குறிப்பிட்டு உணர்த்துகிறது !


கச்சி ஒருகால் மிதியா, ஒருகாலால்
தத்துநீர்த் தண்உஞ்சை தான்மிதியாப் பிற்றையும்
ஈழம் ஒருகால் மிதியா வருமே,நம்
கோழியர்கோக் கிள்ளி களிறு.

(கச்சி - காஞ்சி நகரம்,
மிதியா - மிதிக்கும்
தத்து - தத்திக் குதிக்கும்
தண் - குளிர்ச்சியான
உஞ்சை - உஜ்ஜயினி நகரம்
பிற்றை - பின்னர்
கோழியர் - உறையூரைச் சேர்ந்தவர்கள்
கோ - அரசன்
களிறு - ஆண் யானை)

3 comments:

ENNAR said...

அப்படியா இருக்கும் நன்றி

ENNAR said...

யோகன் கேட்டு நான் கொடுக்கமாட்டேனா
http://www.tamilnation.org/literature/pmunicode/mp121.htm

ENNAR said...

பொருளுடன் வேறுதளத்தில் உண்டு என நினைக்கிறேன் இருந்தால் தொடுப்பு தருகிறேன்.
அடுத்து எனக்கு ஒரு ஐயம் அதாவது எனது ஊரின் பெயர் துவாகுடி இதை தாவடி எனவும் அழைப்பர் இதே தாவடி பெயருடன் இலங்கையில் உள்ளதல்லவா? அதைப்பற்றி கொஞ்சம் சொல்லுங்கள் தெரிந்தால்.