அர்ச்சுனன் தீர்த்த யாத்திரை சென்றிருந்த போது மணிபுரியை அடுத்த வனத்தில் மணிபுரி ராஜகுமாரியான சித்ராங்கியைக் கண்டான். இருவரும் காதல் கொண்டார்கள். சித்ராங்கிக்கு அரவான் என்னும் அருமைப் புதல்வன் பிறந்தான். மலைநாட்டுக் கோமகளுக்கு அர்ச்சுனனால் பிறந்த மகனாதலால் அரவான் மகா வீரனாயிருந்தான். பாரத யுத்தம் நடக்கப் போகிறது என்று அறிந்து அவனும் பாண்டவர் படையில் சேர வந்து சேர்ந்தான். போர் தொடங்குவதற்கு முன்னால் சகல இலட்சணங்களும் பொருந்திய மகா வீரனான இளைஞன் ஒருவனைக் களபலி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு வந்த போது, "இதோ நான் இருக்கிறேன்; என்னைக் களபலியாகக் கொடுங்கள்!" என்று அரவான் முன் வந்தான். அவனைக் காட்டிலும் சிறந்த வீரன் யாரும் பாண்டவர் பக்கத்தில் இல்லாதபடியால், தானாக முன் வந்த அரவானையே பலி கொடுக்க வேண்டியதாயிற்று.
தன்னுடைய கட்சியின் வெற்றிக்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த வீர அரவானின் கதை தமிழ் மக்களின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. துரோபதை அம்மனுக்குக் கோயில் கட்டிய இடங்களிலெல்லாம் பக்கத்தில் அரவானுக்கும் கோயில் கட்டி திருவிழா நடத்தினார்கள்.
தான் வெற்றிபெற தன்மகனையே பலிகொடுப்பதா? அப்படிப்பட்ட வெற்றிதேவையா? வான் பெற்று வட்ட நிலவை இழந்தால் ஏது பயன்.
அர்ச்சுணனை கெடுத்து கீதை என்ற பெயரில் உபதேசம் செய்த அந்த மாயக்கண்ணனை என்னவென்று சொல்வது.
6 comments:
அதுதானே சரியான கேள்வி என்னார் ஐயா...
நன்றி குமரன்
//
அர்ச்சுணனை கெடுத்து கீதை என்ற பெயரில் உபதேசம் செய்த அந்த மாயக்கண்ணனை என்னவென்று சொல்வது.
//
ஐயா இந்த அரவான் களப்பலி கதை, பாரதத்தில் பிராந்திய வேறுபாடு. வியாசர் எழுதிய பாரதத்தில் அது இல்லை.
அது போகட்டும், ஆபிரஹாமிடம் தான் பெற்ற மகனையே பலி கொடு, என்று கட்டளையிடும் இறைவனைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
ஏன் அந்த சிவன் பிள்ளைக்கறி கேட்கவில்லையா?
கண்ணன் கீதை என்கிற பெயரில் எதையோ உபதேசம் செய்திருக்கிறான், சிவன் பிள்ளைக்கறி தின்னும் அரக்கன் தான்... ஓ கே...
அந்த ஆபிரஹாமிடம் கேட்ட பலி பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை நீங்கள் இன்னும் சொல்லவில்லையே...?
அதுவும் போருக்காகவா...சும்மா...ஒரு நாள் இறைவனுக்குப் பொழுது போகவில்லை என்று தன் மேல் அவனக்கு நம்பிக்கை உள்ளதா என்பதை சோதிக்க பெற்ற பிள்ளையையே பலி கொடுக்கக் கேட்ட ஜெஹோவாவை என்ன வென்று சொல்வது?
//ஆபிரஹாமிடம் தான் பெற்ற மகனையே பலி கொடு,//
நண்பரே நான் இதைப் படிக்க வில்லையே
சொல்லுங்கள் தெரிந்து கொள்கிறேன்
Post a Comment