நாலாயிர திவ்யப் பிரபந்தத்தின் ஒரு
முழு 'ஆயிர'த்தையும் அவருடைய பெரிய
திருமொழி வியாபிக்கிறது. எல்லா
வகைப் பாடல்களையும் செய்திருக்கிறார். சங்க
இலக்கிய மரபான மடல்கள் இரண்டை,
பகவான் பேரில் அனுப்பியிருக்கிறார். வாழ்க்கையில் ஓர்
அரசனுக்குரிய சந்தோஷங்களையும், பதவிச்
சலுகைகளையும் பெற்றும் பக்தியில் ஈடுபட்டு இத்தனை
உருக்கமாகப் பாடியுள்ளது பிரபந்தத்தில் வற்றாத
வியப்பு. திருமாலை அவர்
எப்படிக் கருதுகிறார் என்று
சென்ற கட்டுரையில் பார்த்தோம்.
எம்பிரான் எந்தை என்னுடைய சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாணாள்
எனக்கு அரசு என்னுடை வாணாள்
எனக்கு நன்மை செய்பவன், என்
தந்தை, உறவினன், என்
அரசன், என்னுடைய வாழ்நாள் எல்லாமே திருமால்தான் என்கிறார். மனித
உடலை எப்படிக் கருதுகிறார்?
ஊனிடைச் சுவர் வைத்து
என்பு தூண் நாட்டி
உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும்போது உன்றன்
சரணமே சரணம் என்றிருந்தேன்.
உரோமம் வேய்ந்து ஒன்பது வாசல்
தானுடைக் குரம்பை பிரியும்போது உன்றன்
சரணமே சரணம் என்றிருந்தேன்.
மாமிசம் எலும்பு, உரோமம்
இவைகளால் செய்யப்பட்டு ஒன்பது
வாசல் வைத்த இந்தச்
சரீரத்தை விட்டு உயிர்
பிரியும்போது உன்னைச் சரணடைய
வேண்டும் என்று இருக்கிறேன்.
அதற்குள் அவர் ஊர்
ஊராய்ச் சென்று பாடிய
பாசுரங்கள் பலவற்றுள் திருவேங்கடத்தில் பாடிய
பாடல்கள் உருக்கமானவை.
மானே கண்மடவார் மயக்கிற் பட்டு
மானிலத்து
நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே
மான்கண் பெண்களின் மோகத்தில் நான்கு விதமான பாவங்களும் செய்தேன்.
நானே நானாவித நரகம்புகும் பாவம் செய்தேன்
தேனேய் பூம்பொழில் சூழ் திருவேங்கட மாமலை என்
ஆனாய் வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டு அருளே
மான்கண் பெண்களின் மோகத்தில் நான்கு விதமான பாவங்களும் செய்தேன்.
திருமங்கையாழ்வாரின் பல பாடல்களில் இவ்வகையான பாவமன்னிப்புக் கோரும்
repentant தொனியைப் பார்க்கலாம். வைணவக்
கருத்துகளில் முக்கியமானது சரணாகதி தத்துவம். தான்
செய்த தவறுகளை உணர்ந்து கடவுளிடம் சரணடைந்துவிட்டால் மன்னிப்பு கிடைக்கும் என்பதன் மறுபிரதியை மற்ற
மதங்களிலும் காண்கிறோம்.
திருமங்கை ஆழ்வாரின் பிரமிப்பூட்டும் பாடல்களில் இது
ஒன்று.
கொன்றேன் பல்லுயிரைக் குறிக்கோள் ஒன்றிலாமையினால்
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே
என்றேனும் இரந்தார்க்கு இனிதாக உரைத்தறியேன்
குன்றேய் மேகமதிர் குளிர்மாவேங்கடவா
அன்றே வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே
காரணமில்லாமல் பல உயிர்களைக் கொன்றேன். என்னிடம் வந்து
யாசகம் கேட்டவர்களிடம் இனிமையாக பேசக்கூட இல்லை.
வேங்கடப் பெருமானே உன்னை
வந்தடைந்து விட்டேன் என்னை
ஆட்கொள்வாய்.
கஷ்டத்தில் இருப்பவர்களிடம் இனிமையாகப் பேசினால்கூடப் போதும்.
அதற்கும் நேரமில்லாமல் பல
உயிர்களைக் காரணமில்லாமல் துன்புறுத்தியிருக்கிறேன் என்று
தப்பை ஒப்புக் கொள்வதற்கு மிகுந்த மன
முதிர்ச்சி வேண்டும்.
பிற்காலத்தில் அருணாகிரிநாதரிடம் இந்தப்
போக்கைக் காண முடிகிறது. மற்றொரு பாடலில் ஆழ்வார் தன்
வாழ்க்கையின் பொழிப்புரையை இரண்டு
வரிகளில் தருகிறார்.
தெரியேன் பாலகனாய் பல
தீமைகள் செய்துமிட்டேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
பெரியேன் ஆயினபின் பிறர்க்கே உழைத்து ஏழையானேன்
சின்ன வயசில் அறியாமையால் பல
தீமைகள் செய்துவிட்டேன், பெரியவனானதும் மற்றவர்க்கு உழைத்து ஏழையாகிவிட்டேன் என்று
ஒப்புக்கொள்ள யாருக்கு மனம்
வரும்?
திருமங்கை மன்னன் பாடிய
தலங்களின் அழகான தமிழ்ப் பெயர்கள் கிறக்கமூட்டும் திருக்காவளம்பாடி, திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன்பள்ளி, திருவெள்ளியம்பாடி, திருப்புள்ளம்பூதங்குடி, திருநாங்கூர் செம்பொன்சேய்கோயில், திருநந்திபுரவிண்ணகரம் என்று
பெரிய பெயர்களுள்ள சின்னச்சின்ன ஊர்களில் எல்லாம் போய்ப்
பாடிப் பரவசமடைந்திருக்கிறார். கேரள
மாநிலத்தில் இன்று திருவெள்ளா என்று
அழைக்கப்படும் ஊர், அவர்
காலத்தில் திருவல்லவாழ் என்றிருந்தது. திருநிறையூர், திருக்கண்ணபுரம், திருவரங்கம் போன்ற
தலங்களை அதிகம் பாடியிருக்கிறார். வல்லவாழ் பாசுரங்களில் ஓசை
நயத்தையும், பொருள் நயத்தையும் ரசிக்கலாம்.
தந்தை தாய் மக்களே
சுற்றமென்று உற்றவர் பற்றி
நின்ற
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழியெனக் கருதினாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனான
மைந்தனர் வல்லவாழ் செல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே
பந்தமார் வாழ்க்கையை நொந்து நீ பழியெனக் கருதினாயேல்
அந்தமாய் ஆதியாய் ஆதிக்கும் ஆதியாய் ஆயனான
மைந்தனர் வல்லவாழ் செல்லுமா வல்லையாய் மருவு நெஞ்சே
தந்தை, தாய், உறவினர் போன்றவரைச் சார்ந்து நிற்கும் வாழ்க்கையை நீ
ஒரு பந்தமாகக் கருதினாயானால் முடிவும், முதலும்-முதலுக்கும் முதலுமான திருமாலை வல்லவாழ் கோயிலில் சென்று
அடையும் வழியைப் பார்
நெஞ்சே!
பெரியாழ்வாரைப் போல பிள்ளைத் தமிழின் கூறுகளாக சில
பாடல்கள் கண்ணனை மையமாக
வைத்து திருமங்கை மன்னனும் அமைத்திருக்கிறார். வெண்ணெய் உண்டது,
சப்பாணிப் பருவம், ஆய்ச்சியர் முறையிடல்.
ஆய்ச்சியரின் வாசலில் அழகாக
ஆடை அணிகலன்களுடன் வந்து
நின்று புன்னகைத்து அவர்களை மயக்குகிறான் என்று
முறையிடுவதும்,
வியப்பதும் ஒரு தனிப்பட்ட பார்வை.
கண்ணன் காதலனா, குழந்தையா என்கிற
மருட்சி ஏற்படுத்தும் அணுகல்
இது.
சுற்றும் சூழல்தாழச் சுரிகை
அணைத்து
மற்றும் பலமாமணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என்னிது என்னிது வென்னோ
மற்றும் பலமாமணி பொன் கொடணிந்து
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர்
எற்றுக்கு இது என்னிது என்னிது வென்னோ
அணிகலன்களும் அலங்காரங்களும் கொண்டு
எங்கள் முற்றத்தில் நுழைந்து புன்னகை செய்கிறாய். எதற்காக இது?
என்னதான் இது? என்று
வியப்படைகின்றனர் ஆய்ச்சியர்.
பல பறவைகளை நோக்கி
மாயனை அழை என்று
சொல்லும் பாடல்கள் பத்து
வெண்துறை என்னும் அரிதான
பா வகையில் பாடியிருக்கிறார்.
அவைகளில் ஒன்று.
கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமாமுகில் போல் நிறத்தான்
உரையார் தொல்புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய்
கருமாமுகில் போல் நிறத்தான்
உரையார் தொல்புகழ் உத்தமனை வரக்
கரையாய் காக்கைப் பிள்ளாய்
என்று கண்ணன் வருமாறு கரைவாய் என்று
காக்கையிடம் வேண்டிக் கொள்கிறாள் பெண்.
ஓர் இளம் பெண்ணின் நோக்கிலிருந்தும் பல
பாடல்கள் இயற்றியுள்ளார்.
திருமங்கை ஆழ்வாரின் திருநெடுந்தாண்டகமும் திருக்குறுத் தாண்டகமும் முறையே
முப்பது, இருபது விருத்தப் பாடல்கள் கொண்டவை.
நெடுந்தாண்டகம்,
எட்டு சீர்கள் அமைந்தவை. குறுந்தாண்டகம், ஆறுசீர் விருத்தம். தாண்டகம் என்னும் இலக்கிய வகையின் விதிகள் கடினமானவை. புள்ளி
எழுத்துகளை நீக்கினால் ஒவ்வொரு அடியிலும் இருக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை 27-க்கு மேல்
இருக்க வேண்டும் என்று
ஒரு விதி சொல்கிறது. இந்தப்
பா வகை வடமொழியில் உள்ள
தண்டகம் என்பதிலிருந்து வந்ததா
என்று ஆராய்ச்சிக் கட்டுரைகள் உள்ளன.
தமிழ் யாப்பின் தாண்டகம் வடமொழியிலிருந்து வேறுபடுகிறது. திருநாவுக்கரசரின் ஆறாம்
திருமுறை தாண்டக யாப்பில் அமைந்தது. திருத்தாண்டகம் என்றும், அவர்
ஏறக்குறைய ஆயிரம் பாடல்கள் இயற்றியுள்ளார். திருமங்கையாழ்வாரின் தாண்டகங்கள் இரண்டும் மொத்தம் ஐம்பது
பாடல்களே. எல்லா அடிகளும் தாண்டக
அடிகளுக்கான இருபத்தேழுக்கு மேற்பட்ட எழுத்துக்கள் கொண்டவையல்ல. திருமங்கை மன்னனின் தாண்டகத்தைப் பற்றி
தனிப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரையே எழுதலாம்.
திருக்குறுந்தாண்டகத்தில் அருமையான அறுசீர் விருத்தங்கள் உள்ளன.
மூவரில் முதல்வனாய ஒருவனை
உலகம்கொண்ட
கோவினை குடந்தை மேய குருமணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனை பைம்பொன்னை அமரர் சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வார் தாமே.
கோவினை குடந்தை மேய குருமணித் திரளை இன்பப்
பாவினைப் பச்சைத் தேனை பைம்பொன்னை அமரர் சென்னிப்
பூவினைப் புகழும் தொண்டர் என் சொல்லிப் புகழ்வார் தாமே.
மும்மூர்த்திகளுக்கும் முதல்வன், உலகத்தை விழுங்கிய தலைவன்,
குடந்தையின் மணித்திரள், இன்பப்
பாட்டு, பச்சைத் தேன்,
பசும்பொன், தேவர்களின் தலைப்பூ இப்படி
என்னவெல்லாம் சொல்லித் தொண்டர்கள் அவனைப்
புகழ முடியும்! திருநெடுந்தாண்டகத்தின் இந்தப்
பாடல் பிரசித்தமானது.
பாருருவில் நீர் எரி
கால் விசும்பும் ஆகி
பலவேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்னநின்ற
இமையவர்தம் திருவுருவேறெண்ணும்போது
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்டபோது ஒன்றாம்சோதி
மூகிலுருவம் எம்மடிகள் உருவம்தானே
பலவேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற
ஏருருவில் மூவருமே யென்னநின்ற
இமையவர்தம் திருவுருவேறெண்ணும்போது
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ
ஒன்று மாகடலுருவம் ஒத்து நின்ற
மூவுருவும் கண்டபோது ஒன்றாம்சோதி
மூகிலுருவம் எம்மடிகள் உருவம்தானே
நிலம், நீர், தீ,
காற்று, ஆகாயம் என்றும் பலவேறு
சமயங்களுமாய் பரந்து விரிந்தவனை ஒருமைப்படுத்தி, பிரமன்,
விஷ்ணு, சிவன் மூவரையும் ஓர்
உருவம் என்று இமையவர்கள் எண்ணும்போது ஓர்
உருவம் பொன்நிறம், ஒன்று
சிவந்த நெருப்புருவம், ஒன்று
கடல் உருவம். இந்த
மூன்று உருவங்களும் கண்டபோது ஒருமைப்படுத்திய ஒரு
சோதி போன்றவன் மேகக்
கருமை படைத்த எங்கள்
நாராயணனின் உருவம், என்று
விஸ்தாரமான அழகான பாசுரத்தால் விளக்குகிறார்.
திருமங்கையாழ்வாரின் திருவெழுகூற்றிருக்கை என்பது
மூன்றாவது ஆயிரமாகிய இயற்பாவில் சேர்க்கப்பட்டிருக்கிறது. எழுகூற்றிருக்கை என்பதும் கடினமான பாட்டமைப்பு. ஏழு,
கூற்று, இருக்கை என்று
பிரிப்பார்கள்.
ஏழு அறையாக்கி சிறுமிகளின் பாண்டியாட்டம் போல
கட்டம் வைத்து புகுந்து வெளிப்படும் அமைப்பு. ஒன்றிலிருந்து ஏழுவரை
ஏறியும் இறங்கியும் சொற்கள் அமைக்கப்படும் இதைச்
சித்திரக் கவி வகையிலும் சேர்ப்பார்கள்.
தொடரும்.........
No comments:
Post a Comment