தலைவர் வரும் வழியில் அவர் அருகில் அந்த கிழவி நெருங்கிவிட்டார். காவல்துறையினரும். மற்றபிரமுகர்களும் அந்த அம்மையாரைப் பிடித்துக் தள்ளி ஓரங்கட்டிவிடப் பார்த்தனர்.
“விடுங்கய்யா நான் ஐயாகிட்ட ஒண்ணு கேக்கணும்" என்று கத்தினார் அந்த அம்மா இதைக் கேட்ட தலைவர்,”அந்த அம்மாவை விடுப்பா இங்கே வாங்கம்மா என்ன கேக்கப் போறீங்கன்னேன்" என்றார். தலைவரே தன்னை அழைக்கிறார் என்ற மகிழ்ச்சி தாளமுடியாமல் அந்தத் தாய் "ஐயா என்ன மாதிரி ஆதரவு இல்லாத எத்தனையோ கெழம் கட்டைங்க இப்படி சாப்பாடு கூடை தூக்கி பொழைக்கிறோம். இது நிச்சயமில்லாத வருமானமய்யா...! கை காலு விழுந்துச்சுன்னா எங்கள யாரு காப்பாத்துவா..! என்று பட பட வென்று பேசினார். இதைக் கேட்டுக் கெண்டு பக்கத்தில் நின்ற ஒரு பிரமுகர், அந்தக் கிழவி ஏதோ பண உதவி கேட்கிறார் என்று நினைத்து, தன் பையிலிருந்து ஒரு இருபது ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்தார்.
“இது யாருக்கையா வேணும் இன்னிக்கு நீங்க இதக் கொடுத்துப்புட்டுப் போயிடுவீங்க..இது நிரந்தரமா எங்க பசிய ஆத்திப்புடுமா? எங்கள் மாதிரி வயசானவங்களுக்கு காமராஜ் ஐயா நெனச்சா நிரந்தரமா ஏதாவது செய்ய முடியும்" என்றபடி அந்தப் பணத்தை வாங்கிக் கொள்ள மறுத்துவிட்டார் அந்த மூதாட்டி, அந்தத் தாயின் வேண்டுகோளையும், ஆதங்கத்தையும் ஆழ்ந்து கேட்டுக்கொண்டிருந்த தலைவர், “ஆகட்டும்..பார்க்கலாம்!” என்றபடி நகர்ந்தார் காமராஜ்.
காரில் ஏறியவுடன்" இந்த மாதிரி ஆதவில்லாத ஒண்டிக் கட்டைகளுக்கு மாசம் எவ்வளவு ஆகும்..?” அதிகாரிகள் சொன்னார்கள் ஒரு இருபது ரூபா ஆகும்.
சென்னை வந்து சேர்ந்த மறுநாளே மாநிலம் முழுக்க உள்ள ஆதரவற்ற முதியவர்களின் புள்ளி விவரத்தை சேகரிக்கச் சொன்னார். அவர்களுக்கு எவ்வளவு செலவாகும் என்று ஒரு பட்ஜெட் போடச் சொன்னார் பத்தே நாளில் "முதியோர் பென்சன் திட்டம்" தயாராகிவிட்டது. மாதம் தோறும் இருபது ரூபாய் அவர்களுக்கு நிரந்தரமாய் கிடைக்க வழி செய்தார் தலைவர். நன்கொடையாக வாங்க மறுத்த இருபது ரூபாயை சட்டப்பூர்வமாகவாங்கி மகிழ்ந்தார் கும்பகோணம் முதாட்டி..
வீரபாண்டியன் எழுதிய ஆகட்டும் பார்க்கலாம் என்ற நூலிலிருந்து
இன்று 200 வாங்குகிறார்கள் நாளை அரசு அவர்களுக்கு 400 வழங்கவிருக்கிறார்கள்
அன்று ஆரம்ப பள்ளி ஆசிரியருக்கு மாத சம்பளம் ரூ.75.00 என நினைக்கிறேன்.
14 comments:
அண்ணா!
அதுதானே!!!மக்கள் தலைவர் என அவர் இன்றும் போற்றப்படுகிறார்;
யோகன் பாரிஸ்
அண்ணா!
அதுதானே!!!மக்கள் தலைவர் என அவர் இன்றும் போற்றப்படுகிறார்;
யோகன் பாரிஸ்
யோகன்
உண்மை ஆமாம் ஆமாம் என்னைக் கவர்ந்த தலைவர்
நன்றி
பெருந்தலைவலரைப் பற்றி பேசினால் நாளெல்லாம் பேச முடியும்!
இறைவன் நமக்களித்த ஒளிக்கீற்றை சரியாக பயன்படுத்தாததாலோ என்ன்வோ, இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.
அதுசரி, என்னார் ஐயா, இது ஒரு தொடரா?
தலைப்புக்கும் பதிவுக்கும் சம்பந்தம் இல்லையே!
ஓ நான் அண்ணனை வைத்தள்ளேன் தாங்கள் தம்பியை வைத்தள்ளீரா.
அதை எழுதி இதை தலைப்பிட்டு விட்டேன் சிந்தித்து மதிய உணவு எழுதியது ஓய்வூதியம் மன்னிக்கவும்
மதிய உணவை கொண்டுவந்தது மக்கள் திலகம் இல்லையா ?
மதியஉணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் காமராஜர் அதை மாற்றி சத்துணவாக கொண்டு வந்தவர் எம்ஜியார்
//மதிய உணவை கொண்டுவந்தது மக்கள் திலகம் இல்லையா ? //
திரு. மணியன் போன்ற கற்றறிந்தவர்க்கே இதில் குழப்பம் இருக்கையில், பாமரனுக்கெல்லாம் இது தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை என எண்ணுகிறேன், என்னார் ஐயா!
[ஒரு உதாரணத்துக்குத்தான் சொன்னேன், திரு. மணியன். தவறாக எண்ண வேண்டாம்!]
மேலும் எழுதுங்கள்!
திட்டம் போட்டு இவற்றையெல்லாம் இருட்டடிப்பு செய்கிறார்கள் இன்றையவர் என அஞ்சுகிறேன்!
இது போன்ற தகவல்களையெல்லாம் பாடப் புத்தகங்களில் இடம் பெறச் செய்ய வேண்டும்.
அடக்கடவுளே மதியஉணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் காமராஜருங்க.
இதைப் படித்துப்பாருங்கள்
http://kamaraj101.blogspot.com/2006/07/101-52.html
இந்த தளத்தில் கண்ட நிகழ்ச்சிக்குப் பிறகு செயளர் மற்றும் நிதி இலாகவை அழைத்து மாணவர்களுக்கு மதியம் உணவுவழங்க வேண்டும் எப்படி வழங்குவது என தலைவர் கேட்டதற்கு நிதி இலாக முதலில் ஒத்துக்கொள்ள வில்லை ஒரு மாணவருக்கு ஒரு வேலை சாப்பாட்டிற்கு எவ்வளவு செலவாகும் என்றார் அதற்கு ஒரு கணக்கை (35பைசா) என நினைக்கிறேன் அப்படியானால் எத்தனை மாணவர்கள் என்று புள்ளி கேட்டார் அவரும் தோராயமாகச் சொன்னார்கள் அப்ப சாப்பாடு போட்டா இன்னும் அதிகமாக மாணவர்கள் வருவார்கள் அல்லவா அதற்கும் சேர்த்து மதிப்பிடுங்கள் என சொல்லி அந்த துண்டு விழும் தொகையை வரியாக போடச்சொன்னார் இன்றைய அமைச்சர்கள் என்றால் யாரையும் கேட்காமலேயே அறிவித்து விட்டு அதிகாரிகளை பழிவாங்குவார்கள் இது நிரம்ப உண்டு எழுததான் நேரமில்லை போங்க காமராஜரின் மதிய உணவையே மறந்து விட்டீர்கள் என்றால் நான் என்ன சொலவது நான் சாப்பிட்டேன் எங்கள் ஊரில் மதியம் கஞ்சி சாதம் பருப்புத் துவையல் நல்ல ருசியாக இருக்கும் மாலை அமெரிக்க பால்பவுடர் பால்
என்னார், தலைவர் என்று எழுதக் கூட கூச்சமாக இருக்கிறது. எங்கள் பள்ளி நாட்களில் இந்தப் பேச்சு,புகழ் ஒன்றும் கிடையாது. அவர் தலைவராக இருந்து காட்டினார். காமராஜர் என்னும் போதே நெஞ்சம் நெகிழ்கிறது.
மிக்க் நன்றி.அவர் கையால்
பள்ளிக்கூடத்தில் வாங்கிய திருக்குறள்
புத்தகம் இன்னும் பத்திரமாக என்னிடம் இருக்கிறது.
களங்கமில்லாத நல்ல மனிதர்.
ஐயா, ஒரே குழப்பமாகி விட்டது. நீங்கள் ஓய்வூதியதிற்கு மாறாக சத்துணவு என எழுத நடுவில் நான் சத்துணவுதிட்டத்தை மதிய உணவு என எழுத குழப்பி விட்டது.
//மதியஉணவு திட்டத்தைக் கொண்டு வந்தவர் காமராஜர் அதை மாற்றி சத்துணவாக கொண்டு வந்தவர் எம்ஜியார்// - இது சரி.
வல்லி சிம்ஹன்
கொடுத்து வைத்தவர் தாங்கள் தலைவர் கையில் புத்தகம் பெற்றுள்ளீர்கள். என்னால் தலைவர் கையைத் தொட்டுக்கும்பித்தான் தான் முடிந்தது அதுவே எனது பாக்கியம் தலைவரிடம் இரண்டு முறை நாண்கொடை கொடுத்தேன்
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
நன்றி நன்றி boys.in
Post a Comment