தேசிகன் வலையில் தான் இதைச் சுட்டேன்
ஸ்ரீரங்கம் கோயில் விமானம் பிரம்மாவின் தவத்தால் திருப்பாற்கடலிருந்து வெளிப்பட்டு தோன்றியதாகும் (இதை சுயம்பு என்று கூறுவர்). பிரம்மா நித்திய புஜை செய்ய சூரியனை நியமித்தார். பிறகு சூரிய குலத்தில் பிறந்த அரசன் இட்சுவாகு இந்த விமானத்தை தனது தலைநகரமாகிய அயோத்திக்கு வழிபடக் கொண்டு சென்றான். ராமர் இவ்விமானத்தை இலங்கையிலிருந்து தனது பட்டாபிஷேகத்துக்கு வந்த விபீஷணனுக்கு பரிசாகக் கொடுத்தார்.
இதனை விபீஷணன் தனது தலையின் மீது சுமந்து இலங்கைக்கு எடுத்துச் செல்கையில் வழியில் காவிரியாற்றின் கரையை அடைந்தான். விமானத்தைக் கீழே இறக்கி வைத்துவிட்டு சிறுது நேரம் இளைப்பாறினான். பின்னர் அவன் மீண்டும் புறப்பட நினைத்து விமானத்தை எடுத்தான். எடுக்க முடியவில்லை. எவ்வளவோ முயன்று பார்த்தான். கலங்கினான். அங்கு ஆண்டுவந்த தர்மவர்ம சோழன் ஆறுதல் கூறினான். அரங்கநாதரும் காவேரிக்கரையிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்தார். விபீஷணனுக்காக, தான் "தென்திசை இலங்கை நோக்கி" பள்ளிகொண்டருள்வதாக உறுதியளித்தார். பின்னர் தர்மவர்ம சோழன் அவ்விமானத்தைச் சுற்றி கோயில் எழுப்பி வழிபாடு செய்தான்.
கோயில் ஒழுகில் (Chronicle) தர்மவர்ம சோழன் கட்டிய ஸ்ரீரங்கம் கோயில் காவிரியின் வெள்ளப் பெருக்கினால் மண்ணில் புதையுண்டு மறைந்தது. பின்னர் கிளிச் சோழன் ஒரு கிளியின் உதவியுடன் ("வைகுந்தத்திலுள்ள விஷ்ணுவின் கோயில் இருந்த இடம் இதுதான்; அக்கோயிலை இப்போதும் இங்கு காணலாம்" என்று ஒரு செய்யுளை திரும்பத் திரும்பக் சொல்லிக் கொண்டுடிருந்தது) மற்றும் அவனுக்கு வந்த கனவின் மூலமாக விமானம் இருத்த இடத்தைக் கண்டுபிடித்தான். விமானத்தின் கருவறையைச் சுற்றிக் கோயில் எழுப்பினான்.
சரி இதை ஏன் அந்த ஸ்ரீராமபிரான் விபீஷணனிடம் அதைக் கொடுத்தான்
யாராவது தெரிந்தால் சொல்லுங்கள்
18 comments:
ஐயா, நான் கம்பரின் இராமாவதாரத்திலும் வால்மீகியின் இராமாயணத்திலும் படித்தவரை சொல்கிறேன்.
இந்த திருவரங்க விமானத்தில் கீழ் இருக்கும் திருவரங்க நாதனைத் தான் இராமபிரானும் அவரின் முன்னோர்களும் தினந்தோறும் வணங்கி வந்ததாக இருவரும் கூறுகிறார்கள். நீங்கள் தேசிகன் பதிவில் படித்ததைப் போல் இந்த திருவரங்க விமானம் இக்ஷ்வாகு குல தனமாகத் தான் இருந்து வந்தது. அவர்களின் குலதெய்வமாகவும் இருந்து வந்தது.
இராமபிரானின் முடிசூட்டு விழாவின் போது இராம-இராவணப் போரில் தனக்கு உதவியாக இருந்த எல்லோருக்கும் பரிசுகளை வழங்கி வரும் போது வீடணனின் வேண்டுகோளுக்கு இணங்க இராமபிரான் இந்த திருவரங்க விமானத்தை வீடணனுக்குப் பரிசாக வழங்குகிறான்.
குமரன்
நான் கேட்டது அந்த குலதெய்வ சிலையை ஏன்? அரக்கனிடம் கொடுக்க வேண்டும்.
அதை கொண்டு வந்து திருச்சிராப்பள்ளியில் ஏன் வைக்க வேண்டும் விபீடணன் கேட்டால் கொடுப்பதா?
இதைப்பற்றி ,'குலதனம்' என்ற பேரில் மரத்தடியில் முன்பு ஒரு விவாதம் பெரிதாக நடந்தது.
ஜெயஸ்ரீ நல்லா விளக்கம் கொடுத்திருந்தாங்க.
சுட்டி கிடைச்சால் தருகிறேன்.
நன்றி
துளசியக்கா
தனிமடல் பார்க்கவும்.
துளசி அக்கா, ஜெயஸ்ரீயின் விளக்கம் உள்ள சுட்டி கிடைத்தால் எனக்கும் சொல்லுங்களேன். தனிமடலில் அனுப்புவதென்றால் எனக்கும் மின்னஞ்சல் செய்யுங்கள்.
என்னார் ஐயா,
வீடணன் அரக்க குலத்தவனாய் இருந்தாலும் இராமபிரானால் உடன்பிறந்தோனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவன். அதனால் அரக்கன் என்பது இராமபிரானுக்கு முக்கியமாகத் தோன்றாது இருந்திருக்கலாம். அதனை வீடணன் இலங்கைக்குக் கொண்டு செல்லும் போது மாலை நேரம் ஆகிவிட தன் பிராமண குல வழக்கப்படி அந்தி வேலையின் சந்தியாவந்தனம் செய்வதற்காக காவிரிக் கரையில் அந்த திருவரங்க விமானத்தை வைத்துவிட்டு சந்தி வழிபாட்டினைச் செய்ததாக புராணம் கூறுகிறது. வீடணன் கேட்டால் குலதனத்தைக் கொடுப்பதா என்றால் எது கேட்டாலும் கொடுக்கிறேன் என்ற வாக்கிற்காக இராமபிரான் கொடுத்ததாகக் கொள்ளலாம்.
குமரன்
என்னய்யங்களையே தீர்க்க முடியல யாராலும்.
நான் என்ன கேட்டேன்,"அந்த திருவரங்க விமானத்தை வீடணனுக்குப் பரிசாக ஏன் ராமன் கொடுத்தான்?" அது அவர்கள் நித்தம் வணங்கும் தெய்வமல்லவா?
இந்த விமானத்தால் தான் தாம் துண்ப
மடைந்ததாகக் கருதி தூக்கிவிட்டானா? சென்னையில் கண்ணகியின் சிலைபோல!
அயோத்திக்கு ராஜாவான சந்தோஷத்தில பேதமில்லாமல் எல்லாத்தையும் எல்லார்க்கும் கொடுத்தார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
//அரக்கனுக்கு ஏன் கொடுத்தார்?// நல்ல கேள்வி, யொசிச்சி சொல்றேன்
ஸ்ரீராமபிரான் விருப்பு வெறுப்பற்றவன் அவனுக் அப்படி சந்தோஷம் வராது.
செல்லாத பணத்தை பிச்சைக் காரணிடம் கொடுப்போம் இல்லையா? அதுபோல திருஇராமபிரான் கொடுத்தாரா?
அல்லது வேறு என்ன காரணம் கண்டுபிடிப்போமே!!
இதேபோல, "இராவணனுக்கு சிவபெருமான் கொடுத்த சிவ[ஆத்ம]லிங்கத்தை, 'மாலைபூசை' செய்ய வேண்டி, கீழே வைக்கக் கூடாது எனும் காரணம் கருதி,
அங்கு சிறுவன் உருவில் வந்த விநாயகரிடம் கொடுத்ததாகவும்,
3 முறைக்குள் வாராத காரணத்தால், அச்சிறுவன் அதனைக் கீழே வைத்துவிட,
இராவணன் எவ்வளவோ முயன்றும்,
அவனால் அதைப் பெயர்த்தெடுக்க முடியவில்லை".
என்று கூட ஒரு புராணக்கதை உண்டு!
//இதேபோல, "இராவணனுக்கு சிவபெருமான் கொடுத்த சிவ[ஆத்ம]லிங்கத்தை, 'மாலைபூசை' செய்ய வேண்டி, கீழே வைக்கக் கூடாது எனும்//
இதிலிருந்து ஒரு உண்மை தெரிகிறதா நண்பர்களே "இந்திய நாட்டுப் பொருள்கள் எதுவும் இலங்கைக்குச் செல்லக்கூடாது" என்பது. அப்படிப் போனால் அங்கு சண்டை சச்சரவுகள் தான் நடக்கும். இனிமேலாவது டீசல், மோட்டார், மருந்து முதலியவற்றை கடத்தாமலாவது இருப்பார்களா?
ஐயா, நான் சொன்ன விளக்கத்தைப் படித்து விட்டு அனுமதிக்காமல் விட்டுவிட்டீர்கள் போல் இருக்கிறது. பின்னூட்டப் பட்டியலில் வரவில்லை. கொஞ்சம் பாருங்கள்.
எப்படி விடுபட்டது எனத் தெரியவில்லை தற்போது சேர்த்து விட்டேன் நன்றி குமரன்
//வீடணன் அரக்க குலத்தவனாய் இருந்தாலும் இராமபிரானால் உடன்பிறந்தோனாக ஏற்றுக் கொள்ளப்பட்டவன்.//
எதனால் தனக்கு உதவி செய்ததால் ஏற்றுக் கொண்டார். உதாரணமாக 'கலைஞருக்கு வைகோ போல உதவிக்கு வந்தால் தம்பி என்பார்' அதுபோல தனக்குஉதவியவருக்கு சகோதரன் பட்டம் கொடுத்தார் அந்த சீத்தாராமன்
துளசியக்கா அனுப்பிய தகவலைப் படித்துப் பார்த்தீர்களா? எனது ஐயத்திற்கு விடை கிடைத்ததா? 59 பக்கங்கள் இருந்தும் கதை செல்கின்றதே தவிர எனக்கு விடை கிடைக்க வில்லை.
எனக்கு இன்னொரு சந்தேகம்.
இந்த திருபாற்கடல்னு சொல்றீங்களே அது எங்க இருக்கு?
அனுதினமும் வணங்கும் கடவுள் சிலையானாலும் குல தனமானாலும் கேட்டவர்க்கு இல்லையெனாது கொடுத்தான் இராமன் என்பதே பொருந்துகிறதே ஒழிய திருவரங்க விமானத்தால் இராமனுக்கு துன்பம் நேர்ந்தது என்பது நம் கற்பனையே. அப்படிப்பட்ட குறிப்பு எந்த மொழி இராமாயணத்திலும் இல்லையென்றும் எந்த புராணக் கதையிலும் இல்லையென்றும் எண்ணுகிறேன் ஐயா.
இராமபிரான் விருப்பு வெறுப்பற்றவன் என்று கூறிய அதே மூச்சில் திருவரங்க விமானத்தை செல்லாத பணம் என்று குறித்திருப்பது பொருந்தவில்லை; அடாவடியாகத் தோன்றுகிறது. :-) பெருமாளாகிய இராமபிரானால் வணங்கப்பட்டதால் பெரிய பெருமாள் எனப்படும் திருவரங்கனுக்கு இந்த அவச்சொல் கூடாது.
சொல்கிறேன் பார்க்கிறேன் கேட்கிறேன்
குமரன்
நமது பூஜைஅரைக்குள் யாரையும் அனுமதிப்பதில்லை (மற்றவர்களை) அப்படியிருக்கும் போது தான், தனது முன்னோர்கள் வணங்கிய குலக் கடவுளை{ அதாவது கிராமங்களில் ஒவ்வொரு கும்பத்திற்கும் (அதாவது பங்காளிகளுக்குள்) அதை பட்டவன் என்றும் சொல்வார்கள் வருடம் ஒருமுறை அனைவரும் சேர்ந்து சிறப்பாக விழா எடுப்பதுண்டு அந்த நிகழ்ச்சியில் கிடா வெட்டினாலும் அவர்களுக்குள் தான் உண்பது வழக்கம்
அப்படிப் பட்ட குலதெய்வம்(குலதனம்)
எப்படி மாற்றானிடம் கொடுக்கலாம் என்பது தான் எனது கேள்வி.
Post a Comment