மூவுலகத்திற்கும்
விழிபோன்ற சூரியன் தோன்றினான். அவன் எல்லா மன்னர்களும் தோன்றுவதற்குப் பிறப்பிடமானவன்.
அவனுடைய சிந்தனையிலிருந்து மனு தோன்றினான். நினைவில் இருந்து தொன்றியவன் என்ற பொருளுக்கேற்பப்
பெயரை தாங்கிய மனுவே சோழ மன்னர்கள் எல்லாருக்கும் முதல்வன் ஆவான்.
5. அவனுக்கு மகனாக இஷ்வாகு பிறந்தான். அவன் தேவர்களின்
பகைவர்களைப் பெரும்போர்களில் அச்சுறுத்தியவன். மூவுலகமும் அவனுடைய கீர்த்திக் கடலில்
மூழகியிருந்தாலும் பெரும் மகிழ்ச்சியை அடைந்திருந்தன.
6. அவனுக்கு விகுஷி மகனாகத் தோன்றினான். கடலைகளை இடையணியாகக்
கொண்ட புவிமடந்தையின் கணவனாக அவன் திகழ்ந்தான். இந்திரன் போன்றோரின் கூட்டம் அவன் பாதத்தில்
வீழ்ந்து வணங்க, அக்கூட்டத்தாருடைய மகுடங்களின் ஒளியால் அவன் திருவடித் தாமரைகள் ஒளிர்ந்தன.
No comments:
Post a Comment